மின்சாரத்தை உறிஞ்சக் கூடாது: விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள்


விவசாயிகள் மின்சாரத்தை உறிஞ்சக் கூடாது என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்தார்.ட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கருக்கு (விராலிமலை) பதிலளித்து அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பதில்:விவசாயிகளின் பயன்பாட்டுக்காக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இருமுனை மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் இந்த இருமுனை மின்சாரத்தை மும்முனை மின்சாரமாக மாற்றும் கருவிகளைப் பொருத்தி மின்சாரத்தை உறிஞ்சுகின்றனர்.இவ்வாறு மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின்பளு தாங்காமல் மின் மாற்றிகள் பழுதடைந்து விடுகின்றன. ஒரு மின்மாற்றி 15 முதல் 20 நாள்கள் கூடத் தாங்குவதில்லை. மின்சாரத்தை உறிஞ்சுவது சட்டப்படி தவறு என்றாலும் விவசாயிகள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனாலும், மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் அதைப் பயன்படுத்தி ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

No comments: