மின்சார சோதனைகள் 1771 ம் வருடம் ஒரு புது திருப்பு முனை அடைந்தன . லுய்கி கால்வானி என்ற இத்தாலிய உயிரியல் ஆராய்ச்சியாளர் லேடன் குடுவைகளுடன் ஆராய்ச்சி செய்து வந்தார். அவர் உயிரியல் ஆராய்ச்சியில் சில தவளை கால்களுடனும் ஆராய்ச்சி செய்து வந்தார். இவைகளுக்கும் மின்சாரத்துக்கும் ஏதும் தொடர்பு இல்லை. என்ன நடந்தது ? லேடன் குடுவையிலிருந்து ஒரு மின்பொறி ஒரு தவளை காலை தாக்கியது. தாக்கியதும் அந்த தவளை கால் துடித்தது.
Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label Basic Electrical. Show all posts
Showing posts with label Basic Electrical. Show all posts
ஒரே மின் வயரில் ‘பிளஸ், மைனஸ்’
திருவில்லிபுத்தூர்: நேர், எதிர் என இருவகை மின்சாரங்களையும் ஒரே கேபிள் வயரில் கடத்தும் புதிய வயரை, கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவி கண்டுபிடித்து சாதித்துள்ளார். அவரது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி ராக்கி ஷெனாய். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார். மின் உற்பத்தி பிரிவில் புதிதாக சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் புராஜக்ட் செய்து வந்தார். அதன்படி, மின்சாரத்தைக் கடத்தும் நேர் (+) எதிர் (&) என்ற இரு கேபிள்களுக்கு பதிலாக ஒரே கேபிளை உருவாக்கினார்.அதில் அனைத்து மின் கம்பிகளையும் உள்ளடக்கி, ஒன்றோடு ஒன்று உராய்வு செய்யும் போது தீப்பற்றி விடாமல் தடுக்க மின்தடை கம்பி ஒன்றையும் நடுவில் உண்டாக்கினார்.
எந்தக் கேள்வி சரி
மின்சாரம் என்பதன் சரியான அர்த்தம்:-
மின்சாரம் என்பது ஒரேநேரத்தில் மெதுவாகவும்,வேகமாகவும் செல்லும் என்பதல்ல. அதெபோல் அது ஒரெ நேரத்தில் கண்னுக்கு தெரிவதும் தெரியாததும் அல்ல. இந்தக் குழப்பதிற்கெல்லாம் காரணம் தோராயமாக ஒரு பத்து விதமான தத்துவங்களுக்கு பொதுவாக மின்சாரம் என்ற பெயரைக் கொடுத்துவிட்டார்கள் நமது அறிவியலாளர்கள். மின்சாரம் என்ற ஒரு பொருள் இல்லவே இல்லை. "ELECTRICITY DOES NOT EXIST". இந்த பிராங்க்ளின்,எடிசன், தாம்சன் மற்றும் பல அறிவியல் ஆசிரியர்களும் நம்ம ஊரு ராஜாக்களோட ரொம்ம்ப நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க போல இருக்கு. எப்படி நம்ம 23ம் புலிகேசியோட அப்பா ராஜா தனக்கு பிறந்த 23 குழந்தைகளுக்கும் புலிகேசினு பேரு வச்சாரோ அதேமாதிரி அவங்களும் தாங்கள் கண்டுபிடித்த பல அறிவியல் கோட்பாடுகளுக்கு சும்மா மின்சாரம்னு ஒரே பேர வச்சிட்டாங்க.
இன்வெர்ட்டர் வாங்கப்போறீங்களா? ஒரு நிமிஷம்.. இதைப்படிச்சுட்டு இன்வெர்ட்டர் வாங்குங்க..!
மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து இன்வெர்ட்டர் இன்ஜினீயரும் கொங்கு இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கே.பெரியசாமி அவர்கள் கூறியதாவது :
''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.
இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.

Subscribe to:
Posts (Atom)