திறந்த நிலையில் நேரடி பட்டம் பெற்றவர்களை, அரசு வேலை வாய்ப்புகளுக்கு அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலினை

                  சட்டசபையில், உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: திறந்தநிலை பல்கலையில், நேரடி பட்டம் பெற்றவர்கள், அரசு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதற்கு, அரசாணை எண் 107, தடையாக உள்ளது.    
             இதனால், பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அரசு வேலை வாய்ப்புகளுக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கவும், அரசாணை, 107ஐ நீக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
               இதற்கு, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், அரசாணை 107 வெளியிடப்பட்டது. திறந்த நிலையில், நேரடி பட்டம் பெற்றவர்களை, அரசு வேலை வாய்ப்புகளுக்கு அனுமதிப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. சாத்தியம் இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்தார்.

1 comment:

Karthik said...

All is well