Showing posts with label இணையதளம் சார்ந்த செய்தி. Show all posts
Showing posts with label இணையதளம் சார்ந்த செய்தி. Show all posts

Online application portal in tangedco website new instruction updated ( incloud grievance portal )

 Google translate தமிழாக்கம் 

  • இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் / ஆவணங்களின் ஹார்ட்கோபிகளை டாங்கெட்கோ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.  அசல் தயாரிக்க தேவையில்லை.

  •  இந்த விண்ணப்பத்துடன் தொடர்புடைய அனைத்து கொடுப்பனவுகளும் டாங்கெட்கோ ஆன்லைன் கட்டண போர்டல் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

  •  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் செயல்பாட்டின் போது 'குறைகளை உள்ளிடுக' மெனுவைப் பயன்படுத்தி இந்த போர்டல் மூலம் விண்ணப்பம் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியும்.  டாங்கெட்கோ அலுவலகத்தை அணுக வேண்டிய அவசியமில்லை.

  •  விண்ணப்பதாரர்கள் பணி முடிந்ததும் டாங்கெட்கோ வழங்கிய சேவைகள் குறித்து தங்கள் கருத்தை சமர்ப்பிக்கலாம்.

  •  விண்ணப்பதாரர்கள் OTR / RTR படிவங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் மற்றும் தேவையான விவரங்களை OTR / RTR இல் நிரப்ப வேண்டும்.  படிவத்தை விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பமிட வேண்டும் மற்றும் கையொப்பமிடப்பட்ட படிவத்தை இந்த போர்டல் மூலம் மட்டுமே பதிவேற்ற வேண்டும்.  OTR படிவம் மற்றும் அண்டர்டேக்கிங்-பதிவிறக்கம்

  •  3 மீட்டர் அலகுகள் அல்லது 750 சதுர மீட்டர் மற்றும் அனைத்து வகையான தொழில்துறை கட்டிடங்களுக்கும் மிகாமல் 12 மீட்டர் உயரம் கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு நிறைவு சான்றிதழ் தேவையில்லை. மற்ற எல்லா பயன்பாடுகளுக்கும் சேவை இணைப்பை செயல்படுத்துவதற்கு முன் நிறைவு சான்றிதழ் கட்டாயமாகும்.

  •  விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, ​​ஒப்புதல் விண்ணப்ப கோரிக்கை அறிவிப்பு ‘விண்ணப்ப குறிப்பு எண்’ உடன் உருவாக்கப்படும்.  உருவாக்கப்பட்ட கோரிக்கை ஆன்லைன் போர்ட்டல் மூலம் மட்டுமே செலுத்தப்படும்.  பயன்பாட்டு குறிப்பு எண்ணை பயனர்பெயராகவும் மொபைல் எண்ணை கடவுச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது.
  •  பதிவுசெய்தல் முதல் சேவை விளைவு வரை பயன்பாட்டு நிலையைக் காண "பயன்பாட்டு நிலை மெனு" பயன்படுத்தப்படலாம்.
  •  சேவை இணைப்பை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவைக் காண்க ..
  •  ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்களைக் காண இங்கே கிளிக் செய்க.  
  • Welcome to TANGEDCO Online application filing portal for New Service Connection,Temporary supply,Addition or Reduction of Load in respect of LT service connection (except hut and agriculture) ..


    Kindly go through the following;
        Hardcopies of the Application / Documents uploaded in this website need not be submitted in TANGEDCO office. Originals need not be produced.


        All payments related to this application should be paid only through TANGEDCO Online payment portal .


        Applicants can redress all their application related issues during the process of application through this portal using the 'Enter Grievance' menu. There is no need to approach the TANGEDCO office.


        Applicants may submit their feedback on the services provided by TANGEDCO after work is completed.


        Applicants should download the OTR/RTR forms and shall fill the required details in the OTR/RTR. The form should be duly signed by Applicant alone and the signed form should only be uploaded through this portal. OTR form and Undertaking-Download


        The Completion certificate is not necessary for residential building up to 12m in height not exceeding 3 dwelling units or 750 sq.m and all type of Industrial buildings.For all other applications Completion certificate is mandatory before effecting the service connection.


        On submitting the application, the Acknowledgement cum Demand Notice would be generated along with the ‘Application Reference Number'. The Demand generated shall be paid through online portal only. using Application reference number as Username and Mobile number as password.

        "Application Status Menu" may be used to view the application status from Registration to Service effect.

        View Timelines for effecting service connection..

        Please Click here to see the guidelines for filling up the Online application form.

    புதியமின் இணைப்புக்கு இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதி From 01.03.2020 New LT service connection of all categories (except Hut and Agriculture) through web-portal Mandated Orders


    View Download


    புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
    புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மின் வாரியம் துவக்கியது. அதில், அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாவதால், எந்த இடத்தில் தாமதம் ஏற்படுகிறது என்பதை, துல்லியமாக கண்டறிய முடியும் இத்திட்டம் 01.03.2020 முதல் அமுலுக்கு வருகிறது

    புதியமின் இணைப்புக்கு இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதி தினமலர் செய்தி


    சென்னை:லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. இதனால், கட்டுமான பணிகளை மேற்கொள்வோர், புதிய மின் இணைப்பிற்கு, வாரிய அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அங்கு, அதற்கான கட்டணத்துடன், லஞ்சம் தருவோருக்கு தான், மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை தரப்படுகிறது.நிராகரிப்புலஞ்சம் தராதவர்களின் விண்ணப்பங்கள், தாமதம் செய்யப்பட்டதோடு, கேள்வி கேட்பவர்களின் விண்ணப்பங்கள், ஏதேனும் காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டன. இதனால், பலர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, 2016 ஆகஸ்டில், புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மின் வாரியம் துவக்கியது. அதில், அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாவதால், எந்த இடத்தில் தாமதம் ஏற்படுகிறது என்பதை, துல்லியமாக கண்டறிய முடியும். இணைப்பு வழங்க தாமதிக்க முடியாது. ஆனால், அத்திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதுவரை, 15 ஆயிரம் பேர் மட்டுமே, இணையதளத்தில் விண்ணப்பித்து உள்ளனர்
    இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிராமங்களில் வசிப்போர் சிரமப்படுவர் என்பதால் தான், மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பம் பெறாமல், விண்ணப்பம் வாயிலாகவும் பெறப்படுகிறது. காகித பயன்பாடுதற்போது, கிராமங்களிலும், வேகமான இணைய சேவை, எப்போதும் கிடைக்கிறது. இது குறித்த, விபரமும், அங்குள்ளவர்களிடம் உள்ளது. இதனால், லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, புதிய இணைப்பிற்கு, இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசிக்கப்படும். இந்த முறையால், காகித பயன்பாடு, செலவு, நேரம் குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

    மின் வாரிய இணையதள சேவைக்கு இனி சொந்த தொலைதொடர்பு வசதி

    அனைத்து அலுவலகங்கள் இடையில், கம்ப்யூட்டர் வாயிலாக பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கு, இனி, சொந்த தொலைதொடர்பு வசதியை பயன்படுத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

    மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி, அந்த கோபுரத்தில், மூன்று கம்பியில் மின்சாரம் செல்கிறது.அதன் மேல், 'எர்த் ஒயர்' செல்கிறது. இது, இடி, மின்னலின் போது, மின் கம்பியை பாதுகாக்கிறது. அதிக திறன் உள்ள, மின் கோபுர வழித்தடத்தில், 'எர்த் ஒயருக்கு' பதில், 'பைபர் ஆப்டிக் கிரவுண்ட் ஒயர்' என்ற, தொலைதொடர்புக்கு உதவும், 'கேபிள்' அமைக்கப்படுகிறது.

    அந்த கேபிள், எர்த் ஒயராக செயல்படுவதுடன், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன் படுகிறது.தகவல் பரிமாற்றம்இதன் வாயிலாக, மின் நிலையங்கள்; துணை மின் நிலையங்கள் இடையில், அதிகாரிகள், தொலைபேசியில் பேசுவதுடன், கம்ப்யூட்டரில், தகவல் பரிமாற்றங் களையும் மேற்கொள்கின்றனர்.

    தற்போது, அந்த சேவையை, தலைமை அலுவலகம் முதல் பிரிவு அலுவலகம் வரை, கம்ப்யூட்டரில் பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், ஒன்பது மண்டலம், 42 மின் பகிர்மான வட்டங்கள், 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் இடையே, இணையதளம் வாயிலாக, மின் கட்டணம், உபகரணங்கள் இருப்பு, ஊழியர்கள் விபரம் போன்ற தகவல் பரிமாற்றங்கள், பொது அல்லது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
    இதற்காக, ஒரு அலுவலகத்திற்கு, மாதம் குறைந்தது, 1,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆண்டுக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த செலவை தவிர்க்க, சொந்த தொலைத் தொடர்பு வசதி பயன்படுத்தப்பட உள்ளது.புதிய திட்டம்தற்போது, பைபர் ஆப்டிக் இணைப்பில் உள்ள, துணை மின் நிலையங்கள், அதன் அருகில் உள்ள, மின் வாரிய அலுவலகம் வரை, 'கேபிள்' அமைக்கப்பட்டு இணைக்கப்படும்.

    இதனால், அந்த அலுவலகங்களிலும், சொந்த தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும். இதன் வாயிலாக, தொலைத்தொடர்பு சேவைக்கு, மற்ற நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை. அதற்காக செலவழிக்கும் நிதியில், புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம்.

    மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05/08/2016 ,இன்று "இணையதளம் வாயிலாக புதிய தாழ்வழுத்த மின் இணைப்பு கோரும் சேவை "(on line LT application filing facility) வசதியை தொடங்கி வைக்கிறார்கள்

    Online  Application Filing Facility

    Apply now
    Board Proceedings
    Working Instructions
    Working Instruction and BP-In Tamil

        TANGEDCO

        INAGURATION
    OF
    ONLINE APPLICATION FILLING FACILITY
                                         FOR LTSERVICES                                                                      
          BY
     HONOURABLE CHIEF MINISTER
    TAMILNADU
    ON
     05-08-2016

    TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
     Technical Branch
    …
    O/o. Chief Engineer/Commercial,
    Chennai – 2.

    Memo No.CE/Comml/SE/Comml/EE3/AEE3/F.E.Filing/D.64/16,dt04.08.16
    Sub:- Electricity – Inauguration of online application filing facility for new LT
              service connection by the Hon’ble Chief Minister – Reg.

    Ref:- Per (CMD) TANGEDCO Proceedings No. 362 dated 04-08-2016.

    *******
    Online application filing facility for new LT service connection will be inaugurated by the Hon’ble Chief Minister on 05-08-2016 and the same will be implemented from 05-08-2016 onwards. Further, necessary working instruction to implement the online application filing facility will be issued shortly.
    Therefore, it is hereby instructed to give vide publicity on online application filing facility for new LT service connection especially by displaying banner/Boards in all the TANGEDCO offices viz. section, sub-division, division, circle, regional offices and all collection centres so as to reach the general public in large.

    மின்வாரியத்தில் புதிய மின்இணைப்புக்கு வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மின்துறை செய்திகள் - இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக
     புதிய மின் இணைப்பு பெறும் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது .


    தமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர். ஆனால், புதிய மின் இணைப்பு பெற வேண்டும் எனில், தமிழ்நாடு மின் வாரியத்திடம், விண்ணப்பம் அளிக்க வேண்டும் ஆனால் தற்போது இனிமேல் புதிய மின் இணைப்பு  மற்றும் மின்பளு மாற்றம் மற்றும் தற்காலிக் மின் இணைப்பு  போன்றவைகளுக்கு வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, தேதி, நேரம், வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகும்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

    R-APDRP பிரிவு அலுவகத்தை சாா்ந்தவா்கள் இங்கே கிளிக் செய்யவும்.



    பின்னா் New Service Connection கிளிக் செய்யவும்.
    பின்னா் தங்கள்  District ஜ  தோ்தெடுக்கவும்  செய்யவும்.
    பின்னா் தங்கள் Circle    தோ்தெடுக்கவும்  செய்யவும்.
    பின்னா் தங்கள் Section ல் தங்கள் அலுவலகத்தை   தோ்தெடுக்கவும்..
       அடுத்து Submit ஜ கிளிக் செய்யவும்.

    பின்னா் பெயா் மற்றும் விலாசம் மற்றும் மின்கட்டண விகிதம் செல் எண் ஆகியவற்வை நிரப்பவும் Service Category OTHERS கிளிக்செய்யவும் பின்னா் உரிய ஆவணங்களையும் விண்ணப்பதாரர் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்  செய்யவும்  பின்னா்  தேவை யான மின் பளுவை கொடுக்கவும். பின்னா் படிவத்தை PRINT எடுத்து வைத்துக்கொள்ளவும்   இறுதியாக  Submit the Application கொடுக்கவும்.
            
      R-APDRP பிரிவு அலுவலகத்தை சாா்ந்த விண்ணப்பதாரா்  புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேலும் தெரிந்துகொள்ள தொடா்பு கொள்க   9994882635

    புதிய மின் இணைப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: அடுத்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் ( தினமனி செய்தி )


    புதிய மின் இணைப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

     வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான புதிய மின் இணைப்பை விரைந்து வழங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட உள்ளன. 

    இதன்படி, மின் இணைப்புக்கான விண்ணப்பம் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இதை உரிய ஆவணங்களுடன் இணைய வழியில் பூர்த்தி செய்து, அளிக்கலாம். தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அறியலாம்.
     
     2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த முறை அறிமுகம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

    குறைகளைத் தெரிவிக்க சேவை மையம்: இதேபோல், மின் நுகர்வோர் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கான சேவை மையமும் சென்னையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள மின் வாரியத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் மின் தடை புகார்கள் மட்டுமே பெறப்படுகின்றன. மின் கட்டணம், மீட்டர்கள் உள்ளிட்ட அனைத்து புகார் அளிக்க முழுமையான கணினி மயமாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையம் திறக்கப்பட உள்ளது என்றும் மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

    http://www.dinamani.com/tamilnadu/2015/10/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87/article3086922.ece


    பெரம்பலூர் மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ஏற்பாடு


    பெரம்பலூர் மாவட்டத்தில் மின்கட்டணத்தை செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது என்று மின்வாரிய  மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் 9 பகிர்மான மண்டலங்களாக இயங்கி வருகின்றது. ஒவ்வொரு மண்டலத்தின் தாழ்வழுத்த மின் நுகர்வோர், தங்களது மண்டலத்திற்குள் உள்ள எந்தப்பிரிவு அலுவலகத்தில் வேண்டுமானாலும் மின்கட்டணம் செலுத்தும் வசதி கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. தற்போது மின்தொடர் மூலமாக ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் வணிக விரயங் களைக் கண்டறிய, மறுசீரமைக்கப்பட்ட முடுக்கிவிடப்பட்ட மின்வளர்ச்சி மற்றும் சீர்திருத்த திட்டம்   (ஸிகிறிஞிஸிறி  ஸிமீstக்ஷீuநீtuக்ஷீமீபீ கிநீநீமீறீமீக்ஷீணீtமீபீ றிஷீஷ்மீக்ஷீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ணீஸீபீ ஸிமீயீஷீக்ஷீனீs றிக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ)   என்ற புதியத்திட்டத்தின் மூலமாக புதிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    மின்சாரத்துறை இணையதள சேவை தற்காலிக நிறுத்தம்!


    சென்னை: வரும் 25ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தொழில் நுட்ப மேம்பாட்டு செயல்களின் நிமித்தம் காரணமாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் (www.tnebnet.org) மூலம் வழங்கப்படும் சேவைகள் 25.7.2014 மாலை 4 மணி முதல் 26.7.2014 மாலை 6 மணி வரை சில தொழில் நுட்ப மேம்பாட்டு செயல்களின் நிமித்தம், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படவுள்ளது.

    அத்தருணங்களில் இணையதளம் (www.tnebnet.org) மூலம் மின்கட்டணம் செலுத்தும் சேவை, மின் கட்டண நிலையை அறிதல், மின்னஞ்சல் சேவை, ஒப்பந்தப்புள்ளி தொடர்பான சேவைகள் வழங்க இயலாது. இருப்பினும் அக்காலங்களில் நுகர்வோர் தங்களுக்கு அருகாமையில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் வழக்கம் போல தங்களது மின் கட்டணங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்.

    மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்

    இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும்

    பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்

    அடுத்து தங்களுடைய  9 அல்லது 10 இலக்க  மின்இணைப்பு எண்ணை கொடுத்து   Validate  என்பதை கிளிக் செய்யவும்
                                       

    Mobile Number Registration
    Region : *




    தங்கள் மின்இணைப்பு எண்ணில் ஏற்கெணவே செல் எண் பதிவு செய்திருப்பின் கீழே உள்ளது போன்று தோன்றும்


     செல் எண் தவறாக இருந்தாலோ அல்லது செல் எண்ணை மாற்ற விரும்பினாலோ 
    சம்மந்தப்பட்ட அலுவலகம் சென்றுதான் மாற்ற முடியும்.   இந்த செய்தியை தாங்கள் பகிர்ந்து உதவவும்

    110 நகரங்களில் வசிப்பவர்கள் மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தலாம் புதிய வசதி அறிமுகம்

    சென்னை,
    30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 110 நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் மின்கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தலாம் என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
    புதிய திட்டம்
    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 9 பகிர்மான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மண்டலங்களில் வசிக்கும் மின்நுகர்வோர்கள் கடந்த 2008–ம் ஆண்டிலிருந்து மண்டலத்திலுள்ள எந்த பிரிவு அலுவலகத்திலும் தங்களுக்குரிய மின்கட்டணத்தை செலுத்தும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மின்தொடர் மூலமாக ஏற்படும் தொழில் நுட்ப மற்றும் வணிக விரயங்களை கண்டறிந்து தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மின் இணைப்புகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

    தமிழகம் முழுவதும் அனைத்து விதமான மின் இணைப்புகளுக்கும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் இப்போது கோபிச்செட்டிப்பாளையத்தில் சோதனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

      மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...