Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label வாரிசு வேலை. Show all posts
Showing posts with label வாரிசு வேலை. Show all posts
உடல் நலம் இயலாமை காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழ்நாடு அரசு உத்தரவு
GO 10.pdf DATE 13.2.2009
சென்னை : உடல் நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு ( நாள் 13.2.2009 ) பிறப்பித்துள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை செயலாளர் வெளியி்ட்ட உத்தரவு வருமாறு:-
மரணமடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களான மகன், மணமாகாத மகள், நெருங்கிய உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் நேரடி பணி நியமன சலுகையினை வேலைவாய்ப்பகங்களை தொடர்பு கொள்ளாமல் அளிப்பது போல் மருத்துவ இயலாமை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் மகன் மணமாகாத மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குடிமைப்பணி ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகையை மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் விரிவுப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு கவனத்துடன் பரீசிலனை செய்தது. அதைத்தொடர்ந்து மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் மகன் மணமாகாத மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகப்பட்ச வயதை 50 வயதில் இருந்து 53 ஆக அதிகரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியரின் 2-வது மனைவியின் குழந்தைகளுக்கு சொத்துரிமை இருப்பதை சுட்டிக்காட்டி, அரசு கருணை வேலை கோர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. முத்துராஜ் தனது மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது தந்தை மாலையப்பன் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அவர் மரணமடைந்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தான் அவரது இரண்டாவது மனைவியின் மகன் என்பதால், தனக்கு கருணை வேலை அளிக்க முடியாது என்று காவல்துறை தெரிவித்து விட்டதாகவும், எனவே தனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தை பொருத்தவரை 'ஒருவருக்கு, ஒரு மனைவி' என்ற அரசின் கொள்கை மற்றும் விதி நடைமுறை உள்ளதாகவும், சில மதங்கள் பல தார திருமணங்களை அனுமதித்தாலும், அரசு ஊழியராக இருப்பவர் அரசின் முன் அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார்.
மேலும் அரசு ஊழியர்களின் இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு சொத்துரிமை இருப்பதை சுட்டிக் காட்டி 'அரசு கருணை வேலை' கோர முடியாது என்றும், கருணை வேலை என்பதும், சொத்துரிமை என்பதும் வெவ்வேறாகும் என்றும் சொத்துரிமையை மேற்கோள் காட்டி இரண்டாவது மனைவி மற்றும் அவரின் குழந்தைகள் கருணை வேலை கோர முடியாது என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.
மின்வாரியத்தில் திருமணமான பெண்ணிற்கு கருணைப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு ( தினமலா் செய்தி)
மதுரை: 'திருமணம் முடிந்துவிட்டதாகக்கூறி, கருணைப் பணி நியமனம் வழங்க மறுப்பது தவறு,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை உமாமகேஸ்வரி தாக்கல் செய்த மனு:எனது தந்தை மின்வாரியத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரிந்தார். 2011 அக்.,24 ல் இறந்தார். கருணைப் பணி நியமனம் கோரி, மின்வாரிய மதுரை கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்தேன். அவர், 'உங்களுக்கு திருமணமாகி விட்டது,' என நிராகரித்தார். இதை ரத்து செய்து, பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதி டி.ஹரிபரந்தாமன்: திருமணமான பெண் வாரிசுகளுக்கும், கருணைப் பணி வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, சூழ்நிலைக்கேற்ப மாற்றம் கொண்டுவருவது மக்கள் பயனடையவே. குறிப்பிட்ட கால நிர்ணயம் வரையறுத்து, அதற்கு முன் திருமணம் முடிந்தவர்களுக்கு கருணைப் பணி உண்டு. அதற்கு பின், திருமணம் முடிந்தவர்களுக்கு கருணைப் பணி வழங்க முடியாது என்பது, ஒருவரை ஒருவர் வேறுபடுத்துவதாகும்.மனுதாரர் உடன் பிறந்தவர்களில் 2 பேரும் பெண்கள். திருமணம் முடிந்துவிட்டதாகக்கூறி, பணி வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. பணி வழங்குவது பற்றி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் வி.முனியசாமி ஆஜரானார்.
கருணை மனுக்களை அணுகுவது எப்படி?- உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப் பித்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் மனுக்களை அதி காரிகள் எவ்வாறு அணுக வேண் டும் என்பதுகுறித்து உயர் நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித் துள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் எஸ்.வேல்ராஜ். இவரது தந்தை சண்முகய்யா மின்வாரியத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து 19.3.1992-ல் இறந்தார். அப்போது வேல்ராஜ் 12 வயது சிறுவனாக இருந்தார். மேஜரானதும் கருணை வேலை கேட்டு மின்வாரியத்துக்கு மனு அனுப்பினார். ஆனால் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று கூறி அவரது மனுவை 15.7.2000-ல் மின்வாரிய அதிகாரிகள் நிராகரித் தனர். இதை ரத்துசெய்து வேலை வழங்கக் கோரி வேல் ராஜ் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி 13.9.2010-ல் தள்ளுபடி செய்தார்.
வாரிசு வேலை தொடர்பாக ஜனதா சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தின்படி வழங்கப்பட்ட தெளிவுரை
வாரிசு வேலை தெளிவுரை 09.10.15.pdf
View Download
தற்போதுள்ள வாரியத் தலைவரிடம் த.மி.வா.ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மட்டுமே கடந்த டிசம்பர்-2014 அன்று தமிழக அரசின் ஆணையை குறிப்பிட்டு வாரிசு வேலை தொடர்பாக மின் வாரியத்திலும் அதனை அமுல்படுத்திட கோரி அளித்திட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக இவ்வாணை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வாரிசுதாரர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள்.
View Download
தற்போதுள்ள வாரியத் தலைவரிடம் த.மி.வா.ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மட்டுமே கடந்த டிசம்பர்-2014 அன்று தமிழக அரசின் ஆணையை குறிப்பிட்டு வாரிசு வேலை தொடர்பாக மின் வாரியத்திலும் அதனை அமுல்படுத்திட கோரி அளித்திட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக இவ்வாணை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வாரிசுதாரர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள்.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?
அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர். இந்நிலையில் உரிய கல்வி, வயது தகுதியுடன் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என 2010ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் இதை பிறப்பிப்பதாக அறிவித்தது. இதனால் அரசு ஊழியரின் வாரிசு 18 வயதுக்குள் கீழ் இருந்தால் விண்ணப்பிக்க முடியாது. இதற்கிடையே மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையை 2012 ஜூலை முதல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு ரத்து செய்தது.இது போல் தமிழக அரசும் இந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும். இதன் மூலம் பலர் பயன்பெறுவர் என, அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...


