இலங்கை மின் கட்டண உயர்வு தற்காலிகமானது

மின் கட்டண உயர்வு தற்காலிகமானது
news
மின்சாரக் கட்டண உயர்வு ஒரு தற்காலிக செயற்பாடுதான். இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சமாளிப்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று தெரிவித்துள்ளார் மின் சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசிய அமைச்சர் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதைத் தெரிவித்தார். சம்பூர் அனல் மின் ஆலையும் நுரைச்சோலை மின்சார ஆலையும் தேசிய மின் வழங்கும் சேவைக்கு மின்சாரத்தை வழங்கும் நிலை ஏற்பட்டதன் பின்னர் ஜனவரியிலிருந்து  பொதுமக்களுக்கு சலுகைகள்  வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
 
அரசு நிலக்கரி மின் ஆலைத் திட்டங்களில் இறங்குவதில்லை எனவும் அதற்கும் பதிலாகத்  தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குவது என்றும் 1993 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அதுதான் இன்றைய மின்சார சிக்கலுக்குக்  காரணமாகவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்

No comments: