விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது

விவசாய மின் இணைப்பில் மாற்றம் மக்களிடம் ஆணையம் கருத்து கேட்பு
*******************
Notification No. TNERC/DC/ 8- /dated .03.2020 


View Download
------------------------
விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. மின் வினியோகம் தொடர்பாக, மின் வாரியம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை, ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடுகிறது.தற்போது, விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள், வேறு இடங்களுக்கு மாற்ற விரும்பினால், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விவசாயத்திற்கு பெற்ற மின்சாரத்தை, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, பல வழிமுறைகள் உள்ளன.
அவற்றில், மாற்றங்களை செய்ய, ஆணையம் முடிவு செய்துள்ளது.l அதன்படி, தமிழகத்திற்குள், விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்; இதற்கு ஏற்படும் செலவை, நுகர்வோர் ஏற்க வேண்டும்; மின் இணைப்பு பெற்ற, ஓராண்டிற்கு பின் தான் மாற்ற முடியும்l விவசாய மின்சாரத்தை தண்ணீர் இறைக்க மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழிலுக்கும் பயன்படுத்தலாம்.
ஒரே சமயத்தில், இரு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது l விவசாய மின் இணைப்பு பெற, கிணற்றுடன், 0.5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்l மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவருக்கு, மின் வாரியம் ஒப்புதல் கடிதம் வழங்கிய நிலையில், ஐந்து ஆண்டுகள் வரை விண்ணப்பம் உயிர்ப்புடன் இருக்கும்l மின் வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில், மின் இணைப்பு பெறுவதற்கு முன் அல்லது மின் இணைப்பு பெற்ற பின், மின் நுகர்வோரின் பெயரை மாற்றலாம்.
இந்த புதிய வழிமுறைகளை ஏற்படுத்த, அவை தொடர்பான வரைவு அறிக்கையை, ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றின் மீது, ஏப்ரல், 6ம் தேதி வரை, கருத்துக்கள், ஆலோசனை மற்றும் எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என்றும், ஆணையம் தெரிவித்துள்ளது.
Source: dinamalar.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click