என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு


என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை பணி மூப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் 10372 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு பல வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 1996 ஆம் ஆண்டு, அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யுமாறு அந்நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து என்.எல்.சி நிறுவனம், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பல வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை இன்று(ஏப்ரல் 16) உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.

தீர்ப்பின்படி, என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்கள் விவகாரத்தில் 1996 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாகவும், அதன்படி ஒப்பந்த ஊழியர்களின் பணிமூப்பின் அடிப்படையில், அவர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments: