மத்திய மின் சட்டத்தில் திருத்தம்நிபுணர் கமிட்டி விரைவில் அறிக்கை


புதுடில்லி:மாநில மின்சார ஒழுங்குமுறை கமிஷன்களுக்கு அதிக அதிகாரம், மின் தொகுப்புகள் சரியான முறையில் செயல்படுவதற்கான நடவடிக்கை என, பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் வகையில், மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

மாநிலங்களுக்கு மின்சாரத்தை பகிர்ந்து கொடுக்கும், மின் தொகுப்பில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால், 22 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு, நாடே இருளில் மூழ்கியது. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மாநில மின்சார ஒழுங்கு முறை கமிஷன்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய மின்சார சட்டம் - 2003ல் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது.இதற்காக, மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இக்கமிட்டி, பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின், அறிக்கை தயாரித்துள்ளது. இவ்வறிக்கை, விரைவில் மத்திய மின்சார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை பரிசீலனை செய்த பின், மத்திய மின்சார சட்டம் - 2003ல் திருத்தம் செய்ய, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும்.

No comments: