திருச்சி 23ம் தேதி வரை மின் நுகர்வோர் குறைதீர் முகாம்


 திருச்சி மின் பகிர்மான வட்டத்தில் வரும் 5ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது.

திருச்சி மின் பகிர்மானம் முசிறி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் வரும் 5ம் தேதி, லால்குடி கோட்ட அலுவலகத்தில் 9ம் தேதி, ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் 12ம் தேதி, திருச்சி நகரிய கோட்ட அலுவலகத்தில் 16ம் தேதி, மணப்பாறை கோட்ட அலுவலகத்தில் 19ம் தேதி, திருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்தில் 23ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. அந்தந்த கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர் மின்வினியோகம் தொடர்பான தங்களின் குறைகளை, மேற்பார்வை பொறியாளர்களை நேரில் சந்தித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இந்த தகவல் மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: