செம்பியம் துணை மின் நிலையம் டிசம்பர் மாதம் செயல்படும்: நத்தம் விசுவநாதன்


சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் சவுந்திரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), பெரம்பூர் தொகுதி 34-வது வட்டம் செம்பியம் பகுதிக்கு துணை மின்நிலையம் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது:- 

செம்பியம் காந்திநகர் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டு இந்த பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணி முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். 

No comments: