நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில், புதிய நீரேற்று மின்நிலையம்! முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு!!

. ரூபாய் 7 கோடி மதிப்பில் நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில் புதிய நீரேற்று மின்நிலையம் அமைக்கப்படும்; என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று விதிஎண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, புதிய மின்திட்டங்கள் பலவற்றை அறிவித்தார். அப்போது ,  தமிழகம் முழுவதும் 2013ம் நிதியாண்டில் வீடு, விவசாயம் மற்றும் தொழில்களுக்காக புதிதாக 11 லட்சம் மின் இணைப்புக்கள் வழங்கப்படும்; என்றும்,  ரூபாய் 7 கோடி மதிப்பில் நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில் புதிய நீரேற்று மின்நிலையம் அமைக்கப்படும்; என்றும்  2ஆயிரம்  மெகாவாட் மின்உற்பத்தி செய்யம் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்; என்றும் தெரிவித்தார்.
மேலும்,  ரூபாய் 8 ஆயிரம் கோடி செலவில் 56 துணை மின் நிலையங்களும், ரூபாய் 500 செலவில் 20 ஆயிரம் மின் மாற்றி நிலையங்களும் அமைக்கப்படும்; என்றும்,  புதிய நீரேற்று மின்நிலையங்கள் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் செயல்படத் துவங்கும்; என்றும்,  ரூபாய் 850 கோடி செலவில் 2 ஆயிரத்தி 850 மீட்டருக்கு சுரங்க நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

No comments: