Showing posts with label நாளிதழ் செய்திகள் .. Show all posts
Showing posts with label நாளிதழ் செய்திகள் .. Show all posts

25,000 தட்கல் மின் இணைப்பு உட்பட 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள்: அமைச்சர் அறிவிப்பு - தினகரன் செய்தி

தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* சூரிய மின்னாற்றலை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மேற்கூரை அமைப்புகள்  ₹250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.     
* இந்த ஆண்டு, 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இதில், 25,000 விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம்  விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், 25,000 விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண வரிசை முன்னுரிமை, சுயநிதி திட்டம் மற்றும் அரசு திட்டங்களின் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு
வழங்கப்படும்.      
* மின்னணு முறையில் பணம் செலுத்தினால்  வீட்டு வாசலிலேயே வசூல் என்ற கூடுதல் வசதி  ₹1.75 கோடி மதிப்பீட்டிலும் ₹0.20 கோடி வருடாந்திர செலவிலும் அறிமுகப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) எனும் புதிய பணியிடம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற மேற்காண் பணியிடத்திற்கான  உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மார்ச் மாத இறுதியில்  எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணி நியமனத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5000 பணியிடங்களின் எண்ணிக்கை 10,000-ஆக உயர்த்தப்படும்.      
* தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,  சென்னை போக்குவரத்துத்துறையுடன் இணைந்து, ₹7.4 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை நகரில் தற்போதுள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை  சேமிப்புடன் கூடிய சூரிய மின் நிலையம்  மூலம்  இயக்குவதற்கு தேவையான முயற்சிகளை படிப்படியாக  மேற்கொள்ளும்.     
* மின் ஆய்வுத் துறையில் இளநிலை மின் ஆய்வாளர் நிலையில் ஆண்டொன்றிற்கு ₹90.48 லட்சம் தொடர் செலவினத்தில், 20 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.         
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். - தினதந்தி செய்தி

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தித் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மாநிலம் வளர சட்டம்-ஒழுங்கு, மனிதவளம், மின்சாரம் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. இது மூன்றும் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 12 மணி நேர மின்வெட்டு இருந்தது. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 15,410 மெகாவாட் மின்சார உற்பத்தியை புதிதாக கொண்டு வந்திருக்கிறோம்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். இப்போது ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்மிகை மாநிலம் என்று கூறியதை இன்றளவும் காத்து வருகிறோம். தமிழகத்தில் இப்போது 3 கோடியே 3 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதால், ஆந்திராவில் உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு சென்றுவிடலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த 3 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 5 ஆண்டுகளில் 13,110 மெகாவாட் மின்சாரமும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின்தேவை திருப்திகரமாக இருப்பதால் மின்வெட்டே இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 340 துணை மின்நிலையங்களை அமைத்துள்ளோம். காற்றாலை மின்சாரம் என்பது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. அதிகமாக 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு கிடைக்கிறது. ஆனால், திடீரென்று 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துவிடுகிறது. இதை ஈடுசெய்ய அனல்மின் நிலையங்களைத்தான் நாட வேண்டியுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தர வேண்டும். ஆனால், 4 ஆயிரம் மெகாவாட் அளவுக் குத்தான் மின்சாரத்தை தருகிறார்கள். இதனால், மீதமுள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நாம் காசு கொடுத்து வெளியே இருந்து வாங்க வேண்டியுள்ளது. அதனால், மின்துறைக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தட்கல் திட்டத்தின் மூலம் 27 ஆயிரம் மின் இணைப்புகளும், இயல்பாக 60 ஆயிரம் மின் இணைப்புகளும் என மொத்தம் 87 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங் கப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகர் பகுதியில் விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக உள்ளாட்சி துறை நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், அலுவலகத்தில் இருந்தே வீட்டின் மின் அளவீட்டை கணக்கிட முடியும். பணம் கட்டாத பட்சத்தில் மின்சாரத்தை துண்டிக்கவும் முடியும். மின் துறைக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீட்டு கடனாக வாங்கப்பட்டுள்ளது.

புது மின் இணைப்புக்கு கட்டணம் பல மடங்கு உயர்த்த மின்வாரியம் முடிவு: கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - தினகரன் செய்தி

சென்னை: புது மின் இணைப்புக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்த கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மின்கட்டணம் அதிகரித்தும் மின்கட்டணம் கடனில் இருந்து மீள முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய புதிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதில் ரூ.1600 என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரூ.4600 ஆக உயர்த்தும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தி.நகரில் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையர் சந்திரசேகர் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் தா.பிரபாகர்ராவ், வெங்கடசாமி, செயலாளர் சின்னராஜலூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொதுமக்கள், விவசாயிகள், சக்கரை ஆலை பிரநிதிகள், ஓய்வு பெற்ற மின்வாரியத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய மின் இணைப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை ஏற்க முடியாது என்று பொதுமக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, புதிய மின் இணைப்பு கட்டணம் 200 மடங்காக உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை பொதுமக்கள் மேல் திணிக்க கூடாது. இதற்கு மாற்றாக வேறு ஏதாவது திட்டத்தை செயல்படுத்தி நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிக்க வேண்டும். உதிரி பாகங்கள் தரமில்லாமல் வாங்குவதால் தான் இதுபோன்ற நஷ்டத்துக்கு காரணம். மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையை இந்த அளவுக்கு உயர்த்தினால் கடன் வாங்கி தான் கட்ட முடியும். எந்த கிராமத்திலும் டிரான்ஸ்பார்கள் பராமரிக்கப்படுவதில்லை. இந்நிலையில் பொதுமக்களிடம் டெபாசிட் தொகையை இந்த அளவுக்கு எதிர்பார்ப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படி பல மடங்கு ஏற்றினால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை தான் உருவாக்கும். இந்த ஆட்சியை கவிழ்க்கிற சூழ்நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள். இவ்வாறு உணர்ச்சி பொங்க பேசினார்கள். கொந்தளிப்பை உருவாக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஒருவர் பேசுகையில், எதற்காக கருத்து கேட்கிறீர்கள் என்ற தகவல் கூட மக்களை சென்றடையச் செய்யவில்லை. தற்போது ஒரு முனை மின் இணைப்பை ₹1600க்கு பெறலாம். ஆனால் இதை அமல்படுத்தினால் ₹24ஆயிரம் ஆகிவிடும். மும்முனை மின் இணைப்பு பெற வேண்டுமானால் ₹50ஆயிரம் வரை செலுத்த நேரிடும். ஒரே அடியாக உயர்த்துவது மக்களிடம் கொந்தளிப்பை உருவாக்கும்.

கேரள வெள்ளம் : மின் ஊழியர்கள் வாரி வழங்கும் ரூ.18 கோடி நிவாரண உதவி..!

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத் தொகையான சுமார் 18 கோடியை வழங்கிட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயல்படும் சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம் திங்களன்று தொமுச பொதுச் செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநிலத்தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஏஐடியுசி சம்மேளன பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், கணக்காயர் களப்பணியாளர் சங்க பொதுச் செயலாளர் சந்திரசேகரன், அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் விஜயரங்கன், ஐஎன்டியுசி சங்க பொதுச் செயலாளர் சேவியர், ஜனதா சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், ஐக்கிய சங்க பொருளாளர் ஜெயப்பிரகாஷ், இஞ்சினியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் குமார், பொறியாளர் கழக தலைவர் அப்பர் சாமி, என்எல்ஓ சங்க பொருளாளர் ஹரிராம், பிஎம்எஸ் சங்க தலைவர் சந்திரன், கார்டு பில்லிங் யூனியன் தலைவர் டி.ரத்தினவேலு, அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் சாமி, இஞ்சினியர் யூனியன் தலைவர் பொன்னம்பலவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள், ஒட்டுமொத்தமாக கேரள மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், தங்களது ஒரு நாள் ஊதியத் தொகையான ரூ.18 கோடியை தமிழக மின்வாரிய நிர்வாகமே பிடித்தம் செய்து, மின்சாரத்துறை அமைச்சர் முன்னிலையில், தமிழக முதல்வர் ஒப்புதலோடு கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொள்ள முடிவு செய்யப்ப'
ட்டது.;

ஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி


  களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழித்தட ஆய்வாளர்கள், வணிக ஆய்வாளர்கள் ஆகிய களப்பணியாளர்கள் 30,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதுதவிர, உதவி பொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர். மாநிலத்துக்கே வெளிச்சம் கொடுக்கும் பணி என்பதால், மின்வாரியத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருப்பினும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முறைகேடு மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததால் வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட, நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட குளறுபடியால் வாரியத்துக்கு 740 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை தெரிவித்தது. அதேபோல் மின்கொள்முதல், திட்டங்களை தாமதப்படுத்துதல் என அதிகாரிகள் மட்டத்தில் பல முறைகேடுகள் நடக்கிறது. அதேசமயம், கீழ்மட்ட அளவிலும் வாரியத்தில் லஞ்சம் தலைதூக்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, புதிய மின் இணைப்பு பெறுதல், வயரில் ஏற்பட்ட பிரச்னையால் மின்சாரம் தடைபடுதல், மீட்டர் பிரச்னை என பல அடிப்படை பிரச்னைகளுக்கு போர்மேன், வயர்மேன் உள்ளிட்ட களப்பணியாளர்களைதான் பொதுமக்கள் நாடுகின்றனர்.

       சொந்த ஊரில் பணிபுரிவதால், களப்பணியாளர்கள் பலர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசு அடிப்படையில் பணிகளை முடித்துக் கொடுப்பதாகவும், அதனால் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, வீட்டில் மின் மீட்டர் தற்போதுள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றால் 500 முதல் 1000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பலர், தங்களுக்கு நன்கு பழக்கம் உள்ள வயர்மேன்களை சிபாரிசு பிடித்து கட்டணம் செலுத்தாமலேயே, தனியார் எலக்ட்ரீசியன்கள் மூலம் மீட்டரை இடமாற்றம் செய்கின்றனர். இதுபோன்ற பல பணிகளில் களப்பணியாளர்கள் விதிமீறல் செய்வதாக மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், கீழ்மட்ட அளவில் நடக்கும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய மின்வாரியம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பல ஆண்டுக்குப் பின், வாரியத்தின் நஷ்டம் தற்போது 4,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவேதான், பொறியாளர்களை நேர்முக தேர்வின்றி எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பது, 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஆன்லைனில் இடமாறுதல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. அதிகாரிகளை தொடர்ந்து, கீழ்மட்ட அளவில் முறைகேடுகளை தவிர்த்து மக்களுக்கு வாரியத்தின் மேல் நம்பிக்கை ஏற்படும் வகையில் பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். முதல்கட்டமாக நடந்த ஆய்வில், 10,000 பேரை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்ய யும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு

நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம்
தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்பத்தியைத் தொடங்கினர். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், தமிழகத்தின் ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமல்லாது அப்போதைய திருவாங்கூர் மாகாணம் தற்போதைய கேரள மாநிலம், மைசூர் உடுப்பி உள்ளிட்ட பகுதிகள் வரை மின் விநியோகம் செய்யப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக காமராஜர் நீலகிரியில் உற்பத்தியாகும் ஆறுகளின் குறுக்கே பல கோடி மதிப்பில் பல அணைகளை கட்டினார். பைக்காரா, அவலாஞ்சி, அப்பர் பவானி, கெத்தை, குந்தா, சிங்காரா உள்ளிட்ட இடங்களில் கனடா மற்றும் ரஷ்ய நாட்டுத் தாெழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மிகப் பெறும் நீர் மின்நிலைய திட்டங்களுக்கு அஸ்திவாரமிட்டார். நாட்டுக்குப் பெரும் பயன்தரக் கூடிய இத்திட்டத்தை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நேரில் வந்து அடிக்கல்நாட்டி திட்டங்களைத் தொடங்கிவைத்தார். போதிய இயந்திர வசதியோ நவீன கருவிகளோ இல்லாத சூழலிலேயே மலைக்க வைக்கக்கூடிய மாபெரும் திட்டத்தை சுமார் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுப்பின்றி வேலை செய்து சுமார் மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றினர். இத்திட்டத்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் மூலம் தமிழகத்துக்குத் தேவையான 833.60 மெகவாட் மின்சாரம், மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆங்கிலேயர் காலம் முதல் பல்வேறு பரிணாமங்களில் படிப்படியாக வளர்ச்சியடைந்த நீர் மின் நிலைய செயல்பாடுகளையும் மற்றும் உற்பத்தி விவரத்தைப் பொதுமக்கள் மற்றும் தொழில் நுட்ப மாணவர்கள் தெரிந்துகாெள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குந்தா மின்வாரிய அலுவலக வளாகத்தில் சமீபத்தில் நீர் மின் உற்பத்தி மற்றும் செயல்பாடு குறித்த வரலாற்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
அருங்காட்சியகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் மின் நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழா, கட்டுமானப் பணிகளை  ஜவகர்லால் நேரு, காமராஜர், கக்கன், மொராஜிதேசாய் உள்ளிட்ட தலைவர்கள் ஆய்வு மேற்காெண்டது உள்ளிட்டவை அடங்கிய வரலாற்றுப் புகைப்படத் தொகுப்புகளும், 600க்கும் அதிகமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த கருவிகள் மற்றும் உதிரிபாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அருங்காட்சியகம் இருபதாம் நுாற்றாண்டின் இரண்டாம் பாதிவரை நீலகிரி மாவட்டத்தின் பங்களிப்பையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான நீர் வழி மின்சார திட்டங்களின் வரலாற்றை விவரிக்கும் விதமாக உள்ள அருங்காட்சியகம், தொழில் நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் அடங்கியுள்ள மையமாகவும் விளங்குகிறது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பழங்கால அணைக்கட்டும் முறை, பராமரிப்பு உள்ளிட்டவற்றை எளிதில் தெரிந்துகொள்ளலாம். சிங்காரா முதல் கெத்தை வரை உள்ள நீர் மின் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத பொருள்களைச் சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

அருங்காட்சியகம் குறித்து குந்தா நீர் மின்உற்பத்தி நிலைய தலைமைச் செயற்பொறியாளர்  ரகு கூறுகையில், ``தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முதல் தலைவரான வி.பி.அப்பாதுரை முதலியார், கனடாவில் நிபுணத்துவம் பெற்று தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு நீர் மின் உற்பத்தியை அறிமுகப்படுத்தினார். மேலும் அருங்காட்சியகத்தில் அவர் நீர் மின் நிலையங்கள் குறித்து கனடாவில் இருந்துகாெண்டு வந்த 5 தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பர் பவானி மற்றும் எமரால்டு அணைகளின் கட்டுமானப் பணிகள் குறித்து படிப்படியான புகைப்பட தொகுப்பு பிரம்மிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தாெழில்நுட்பம் குறித்து தெரிந்து காெள்ள ஆர்வமுள்ளவர்கள், பாெறியியல் மாணவர்கள் எங்களிடம் அனுமதிபெற்று இலவசமாக பார்வையிடலாம்’’என்றார்.  

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி


வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்
பதற்கு கடைசி தேதி!
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக, மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.

இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.

இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.
ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும்.

ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.

5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும்.

சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும்.

அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.

இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் 1 சதவீதம் தள்ளுபடி தினமலர் செய்தி

                டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் 1 சதவீதம் தள்ளுபடி மத்திய அரசின் தொடர் அறிவுறுத்தலை அடுத்து, டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 1 சதவீத தள்ளுபடி வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. டிஜிட்டல்,மின் கட்டணம்,1 சதவீதம்,தள்ளுபடி மின் வாரியத்திற்கு, 2.88 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், இலவச மின் திட்டங்களில் வருவோர் தவிர்த்து, 1.50 கோடி பேர், மின் கட்டணம் செலுத்த தகுதி உடையவர்கள். மின் வாரியத்தின் கட்டண மையம், இணைய தளம், 'மொபைல் ஆப்' என்ற செயலி; அரசு, 'இ - சேவை' மையம், தபால் நிலையம் மற்றும் சில வங்கிகளில், மின் கட்டணத்தை செலுத்தலாம். விழிப்புணர்வு : தமிழகத்தில், 48 லட்சம் பேர் மட்டுமே, டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துகின்றனர். இதை, ஒரு கோடியாக அதிகரிக்க, மின் கட்டண மையங்களுக்கு வரும் நுகர்வோரிடம், டிஜிட்டல் சேவை குறித்து, மின் வாரியம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறது. இந்நிலையில், டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, மொத்த கட்டணத்தில், 1 சதவீதம் தள்ளுபடி வழங்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க, அந்த சேவையை மேற்கொள்வோருக்கு சலுகை வழங்கும்படி, மத்திய அரசு, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதன் நிலை குறித்து, மத்திய மின்துறை, அடிக்கடி ஆய்வும் நடத்துகிறது. Advertisement அறிவிக்கப்படும் : அதனால், டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 1 சதவீதம் வரை, கட்டண சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதல் பெற்ற பின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
http://www.dinamalar.com/news_detail.asp?id=2039194

மின் வாரிய இடமாறுதல் ஜனவரி முதல், இணையதளத்தில் வெளியிட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தினமலா் செய்தி

பணம், ஜாதி சிபாரிசுக்கு முற்றுப்புள்ளி இணையத்தில் மின் வாரிய இடமாறுதல்எந்த சிபாரிசுகளுக்கும் இடம் தராமல், நேர்மையான முறையில், விருப்ப இடமாறுதல் வழங்குவதை உறுதி செய்ய, அது தொடர்பான விபரங்களை, ஜனவரி முதல், இணையதளத்தில் வெளியிட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு, இடமாறுதல், பதவி உயர்வு வழங்க விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஆண்டுக்கு இரு முறை, அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், இடமாறுதல் தேவைப்படுவோரிடம், விருப்ப மனு பெறப்படும். அதில், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்த பின், இடமாறுதல் வழங்கப்படும்.
கடந்த பல ஆண்டுகளாக, விதிமுறைகளை கிடப்பில் போட்டு, பணம் தந்தவர்களுக்கு மட்டும் இடமாறுதல் வழங்கப்பட்டது; இதனால், பலர் பாதிக்கப்பட்டனர். நீண்ட இடைவெளிக்கு பின், இந்த ஆண்டில், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விருப்ப அடிப்படையில் இடமாறுதல் வழங்கும் முறையை, மின் வாரியம் செயல்படுத்தியது.          மின்துறை செய்திகள் 
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, இடமாறுதலுக்கு பணம் வாங்கவில்லை என்றாலும், நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும், முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், எத்தனை பேர் விருப்ப இடமாறுதல் கேட்டனர்; அவர்களில், யாருக்கு மாறுதல் கிடைத்தது; கேட்ட இடம் கிடைத்ததா என்ற விபரங்கள் வெளியில் தெரிவதில்லை
இனி, விருப்ப இடமாறுதலுக்கு வாங்கப்படும் மனுக்கள் விபரம், பணி செய்யும் இடம், மாறுதல் கேட்கும் இடம், காலி இடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், உடனுக்குடன் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். மனு வாங்கும் கடைசி தேதி முடிந்ததும், இணையதளம் வாயிலாகவே பரிசீலித்து, இடமாறுதல் வழங்கப்படும்.
இந்த விபரங்கள் அனைத்தையும், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இதனால், பணம், ஜாதி என, எந்த சிபாரிசுக்கும் இடம் இல்லாமல், இடமாறுதல் வழங்கப்படும். இது, 2018 ஜன., முதல் அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும் போது, மின்சாரத்தை நிறுத்தாமல், ஊழியர்கள் கவச உடை அணிந்து, அவற்றை சரி செய்யும் திட்டத்தை, மின் வாரியம் துவக்க உள்ளது. தினமலா் செய்தி


துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும் போது, மின்சாரத்தை நிறுத்தாமல், ஊழியர்கள் கவச உடை அணிந்து, அவற்றை சரி செய்யும் திட்டத்தை, மின் வாரியம் துவக்க உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அதிக மின்சாரத்தை கொண்டு வரக்கூடிய, 400 கிலோ வோல்ட்; 230 கி.வோ., திறனுள்ள துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், ஏதாவது ஒரு சாதனத்தில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, துணை மின் நிலையம் முழுவதும், மின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதனால், பழுது சரி செய்யப்படும் வரை, வீடு உள்ளிட்ட இணைப்புகளுக்கு, மின் தடை செய்யப்படுகிறது. இதை தவிர்க்க, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், துணை மின் நிலைய சாதனங்களில் பழுது ஏற்பட்டால், மின் இயக்கத்தை நிறுத்த தேவையில்லை. மின்சாரம் பாயும் போதே, பழுதை சரி செய்ய, ஊழியர்களுக்கு, நவீன கவச உடைகளை, மின் வாரியம் வாங்கியுள்ளது. இத்திட்டம், சென்னை, கொரட்டூரில் உள்ள, 230 கி.வோ., துணை மின் நிலையத்தில், இன்று செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊழியர்களுக்கு, மின்சாரம் பாயாத நவீன ஆடைகள், 'ஷூ' ஆகியவை வாங்கப்பட்டு உள்ளன. அந்த ஆடைகள், 25 சதவீத, 'ஸ்டீல்' மற்றும் 75 சதவீதம் கம்பளியால் தயாரிக்கப்பட்டவை. ஒரு ஆடை தொகுப்பின் விலை, 3 லட்சம் ரூபாய்.மின் சாதனங்கள் மேல் அமர்ந்து, பழுதை சரி செய்ய, சிறப்பு உபகரணங்களும் வாங்கப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, 15 லட்சம் ரூபாய். தேவைக்கு ஏற்ப, கூடுதலாக ஆடைகள் வாங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மின் வாரிய உதவி பொறியாளர் பணி சேராதவர் பட்டியல் வெளியாகுமா? தினமலா் செய்தி

மின் வாரியத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 375 உதவி பொறியாளர்களில், சிலர் வேலைக்கு சேராமல் இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை, எழுத்து மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தது.
பல ஆண்டுகளுக்கு பின், அரசியல் குறுக்கீடுகளுக்கு இடம் கொடுக்காமல், திறமையின் அடிப்படையில் தேர்வான, உதவி பொறியாளர்களுக்கு, மார்ச் இறுதியில், பணி ஆணை வழங்கப்பட்டது.
அவர்கள், பணியில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், சிலர் இதுவரை வேலையில் சேரவில்லை என, கூறப்படுகிறது. இதனால், 375 பேரில், வேலைக்கு சேர்ந்தவர்கள் மற்றும் சேராதவர்களின் விபரங்களை, மின் வாரியம் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீண்ட நாட்களுக்கு பின், நேர்மையான முறையில், உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பலர் இளம் வயதினர். அவர்கள் ஏற்கனவே, தங்கள் கல்லுாரி வளாக நேர்காணலில் பங்கேற்று, முன்னணி தனியார் நிறுவனங்களில், வேலை செய்கின்றனர்.
மின் வாரியம் தர உள்ளதை விட, அங்கு அவர்கள், அதிக சம்பளம் வாங்குகின்றனர். இருப்பினும், மொத்தம், 375 பேரில், 95 சதவீதம் பேர் வேலைக்கு சேர்ந்து விட்டனர்.

எஞ்சியவர்கள், வேலையில் சேருவதற்கு, தகுந்த காரணங்களை தெரிவித்து, அவகாசம் கேட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காலத்துக்கு பின், யாரும் வரவில்லை எனில், காத்திருப்போர் பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும். இதுகுறித்து, முழு விபரமும் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது

                மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது. மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிமுதல் கட்டமாக, 525 தொழில்நுட்ப உதவியாளர்கள், 50 உதவி வரைவாளர்கள், 900 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, ஏப்ரல், 3ல் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிட்டது. ஆனால், மார்ச் மாதம், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது; தேர்வு, மே, 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெ., பதவியேற்புதேர்தலில் வெற்றி பெற்று உள்ள, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மே, 23ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனால், மே, 22ல் நடக்க இருந்த எழுத்துத் தேர்வை, மின் வாரியம் மீண்டும் ஒத்திவைத்து உள்ளது.இதுகுறித்து, மின் வாரியம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலை மூலம், 22ம் தேதி நடக்க இருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். 
மேலும் விவரங்களுக்கு, www.tangedco.gov.in மற்றும் tangedco.directrecruitment.in என்ற இணையதளங்களின் முகவரியில் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 24 -ம் தேதிக்குள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும்.

சென்னை: பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 24 -ம் தேதிக்குள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும். இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

பி.இ. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். இதற்கு வரும் 24-ம் தேதி கடைசி நாளாகும்.

2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் முழுவதையும் ஆன்-லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு அறிமுகம் செய்தது. ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான பதிவு தொடங்கியது.ஆன்-லைன் பதிவு செய்ய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.இதன்படி, மே 17 வரை 1,80,646 பேர் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 24 வரையும், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க மே 27 வரையும் மேற்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Source: tamil.careerindia.com

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்

புதுடெல்லி: அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது.   இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது.   அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்;  அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.   இதன்படி, இனி மத்திய  அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.
* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.
*  சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.
*  அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.
*  அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.
*  மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.
*  மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   இதுகுறித்து  மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை  இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார். 
Thanks to 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186743

அண்ணா பல்கலை மூலம் மின் வாரிய ஊழியர் தேர்வு ( தினமலா் செய்தி )

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது. புதிய ஊழியர்களை, அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, ஊழியர் நியமனம் முறைகேடு இல்லாமல், வெளிப்படையாக நடத்தப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தி, புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவர். 
இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்.அதில், தேர்வு நடைமுறை குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். வேலைக்காக, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். 
இவ்வாறு அவர் கூறினார். 

********************************************************************************************************
TNEB ல் நேரடி நியமனத்தை எதிா்நோக்கியுள்ள அணைவரும் தங்களின் கருத்துக்களை பகிா்ந்து கொள்ள வசதியாக ஒரு முகநுால் குழு உருவாக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள நபா்கள் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம் 

TNEB Recruitment 2015-16

குழுவில் இணைய இங்கே  கிளிக் செய்யவும் https://www.facebook.com/groups/1662721517343327/members

மேலும் தங்கள் நண்பா்களுக்கு இத்தகவலை பகிரவும் 

மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தால் 52 ஆயிரம் கோடி கடன் தமிழக அரசின் தலையில் விழும் அபாயம் ( தினகரன் செய்தி )


சென்னை: மத்தியில் புதிய அரசு  பொறுப்பேற்றவுடன், எதிர்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதிய மின்சாரம் சட்டம் கொண்டு வந்து, மாநில அரசு வசம் உள்ள மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கொச்சியில் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநில மின்துறை அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மின்வாரியம் வசம் உள்ள கடன்களை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால் தான், மத்திய அரசிடமிருந்து கடன் மற்றும் மானியங்களை பெற முடியும் என மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர். 

மொத்தமுள்ள 30 மாநிலங்களில் ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மின்வாரியங்கள்தான் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதோடு, அதிக அளவில் கடன்களையும் பெற்றுள்ளன. இதில் தமிழக மின்வாரியம் மட்டும் ரூ.52 ஆயிரம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை “ஜிடிபி” 3 சதவீதத்துக்கும் குறையாமல் இருக்க வேண்டும். இப்படி இருக்கையில், மின்வாரிய கடன்களை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், கல்வி, உணவு, மருத்துவம் உள்பட அத்தியாவசிய மானியங்களை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் அபாயமும் உள்ளது. இந்த புதிய மின்சார சட்ட திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி  தமிழக அரசு இதுவரை எந்த கருத்தும் கூறாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

வீணாகலாமா மின்சாரம்? (தமிழ் தி இந்து கட்டுரை)

Return to frontpage
பெரும்பாலான தருணங்களில் வீட்டில் மின்விசிறிகள் சுழன்றுகொண்டிருக்கும், விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும். இவை போன்ற மின்சாதனங்களை அவசியமற்ற தருணங்களில் நிறுத்திவிடலாம். ஆனால் அப்படிச் செய்கிறோமா என்பது சந்தேகமே. நமது பணம், நமது உரிமை என்னும் மெத்தனத்துடன் செயல்படுகிறோம். மின்னாற்றலை வீணாக்குவது நல்லதல்ல என்பதால் இதில் நாம் கவனத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் நாட்டின் மின் சேமிப்புக்கு நாமும் உதவலாம். சிறு அளவில் மேற்கொள்ளும் சேமிப்பும் ஒரு நாட்டுக்குப் பெருமளவில் உதவவேசெய்யும்.

நாம் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளும் மின் சேமிப்பின் மூலம் நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைச் சமாளித்துவிடலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குளிர்சாதன வசதி, குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம், குழல் விளக்கு, மின் விசிறி, காற்றை வெளியேற்றும் மின் விசிறி, மின்சார அடுப்பு, நீரேற்ற உதவும் பம்பு போன்ற நாம் கையாளும் மின் சாதனங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் போதும் நாட்டின் சேமிப்புக்கு நாமும் கைகொடுக்கலாம்.
மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் மற்றொரு உபயோகமும் உண்டு, காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவலாம். வீட்டில் மின்சாரத்தைச் சேமித்தால் எப்படிச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என யோசிக்கிறீர்களா? இரண்டு சாதாரணமான கார்கள் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுகிறதாம். ஆகவே அநாவசிய மின் உபயோகத்தால் சுற்றுச்சூழலை நாம் மாசுபடுத்துகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவு மின்சாரம்?
பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாடு எவ்வளவு என்பதை ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதன்படி, 12 சதவீதம் குளிர்பதனப் பெட்டிக்கும், 20 சதவீதம் குளிர்சாதன வசதிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் வெந்நீர்க் கொதிகலத்துக்கும், 28 சதவீதம் பிற சாதனங்களுக்கும் செலவாகிறது. அவசியத்துக்குத் தானே நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம் என நாம் நினைக்கலாம். ஆனால் நமது அஜாக்கிரதையால்கூட சில சமயங்களில் மின்சாரம் வீணாகிறது, குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள அறையில் இடைவெளியற்ற முறையான கதவு இருக்க வேண்டும். சிறிய இடைவெளி இருந்தால்கூட மின்சாரம் வீணாகக்கூடும் எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டின் மின்சாரப் பயன்பாட்டில் 20 சதவீதம் குளிர்சாதன வசதிக்கெனத் தேவைப்படுகிறது. ஆகவே இதன் மின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் அவசியம். பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் குளிர்சாதன வசதி இயந்திரம் இயங்க வழிசெய்ய வேண்டும். அறையின் வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ அந்த அறையில் வைக்கக் கூடாது.
குளிர்சாதன வசதி இயந்திரத்தின் அவுட்டோர் யூனிட்டை நிழலான இடத்தில் பொருத்தினால் அதன் மூலம் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும் என்று சொல்கிறார்கள். இதை நாம் பின்பற்றலாம். மேலும் பசுமைக் கூரை அமைப்பதாலும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதாலும், வீட்டின் வெளிச் சுவர்களில் மென்மையான வண்ணங்கள் பூசுவதன் மூலமும்கூட மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.
விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்வதால் அநாவசியமாக மின் விளக்குகளை ஒளிர விடுவதைத் தவிர்ப்பது அவசியம். குண்டு பல்புகள், குழல் விளக்குகள் போன்றவற்றைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரத்தைச் சிறிது சேமிக்கலாம்.
குளிர்பதனப் பெட்டியின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் தேவைப்படுகிறது. இதில் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் அதுவும் மின்சாரத்தைச் சேமிக்க உதவும். அளவுக்கதிகமான குளிர் நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் குளிர்பதனப் பெட்டியை மூடித் திறக்கும் எண்ணிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பெட்டியை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.
குளிர்பதனப் பெட்டிக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் மின்சாரத்தைச் சேமிக்க முடியும். உணவுப் பதார்த்தங்களுக்கு 36-40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஃப்ரீஸருக்கு 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் உகந்தவை எனச் சொல்கிறார்கள். குளிர்பதனப் பெட்டியின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். இல்லையெனில் மின்சாரம் வீணாகும்.
சலவை இயந்திரத்தைப் பொறுத்தவரை எப்போதும் அதை முழுமையாகப் பயன்படுத்துவது நல்லது. அதாவது இயந்திரத்தில் எந்த அளவுக்கு அதிகமாகத் துணிகள் இடம்பெற வேண்டுமோ அந்த அளவுக்குத் துணிகளைப் போட்டுத் துவைப்பது சிக்கன மின்சாரத்தின் பயன்பாட்டுக்கு உதவும். டிடர்ஜெண்ட் பவுடரும் தேவையான அளவுக்குப் போட வேண்டும். மிக அழுக்கான, கறைகள் அதிகமாக உள்ள துணிகளுக்கு மட்டும் வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது.
மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். தேவையான வெப்பநிலையைத் தேர்ந்தெடுத்து முறையாகப் பயன்படுத்துவது அவசியம்.
இப்படி ஒவ்வொரு வகையிலும் திட்டமிட்டுத் தேவையான அளவுக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவது நமது பணத்தை மிச்சப்படுத்துவதுடன் நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஆகவே மின் சாதனங்களை முறையாகக் கையாண்டு மின் ஆற்றலைச் சரியான வகையில் சிக்கனமாகச் செலவழித்து மின் ஆற்றல் சேமிப்புக்கு நம்மால் ஆன அளவில் உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் செயல்படுவோம்.

புதிய இணைப்புக்கு மின்சார மீட்டர்கள் தட்டுப்பாடு வெளியே கடைகளில் மீட்டரை வாங்கி கொடுத்தால் மின் இணைப்பு தினமணி செய்தி

அரக்கோணம் நகரில் மின்சார மீட்டர்கள் விநியோகம் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டதால், புதிய இணைப்பு கோரி மனு செய்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் நகரம் சென்னையின் புறநகராக மாறி வருகிறது. நகரைச் சுற்றி பல பகுதிகளில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. வீட்டு உரிமையாளர்கள் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து அதிகாரிகளிடம் உத்தரவு பெற்ற நிலையில் மின் பயன்பாட்டு கணக்கீட்டு மீட்டர்கள் இல்லாததால் இணைப்புகள் அளிக்கமுடியவில்லை.
கடந்த 03.09.2015 முதல் அரக்கோணம் கோட்டத்தில் மின்சார மீட்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாக மின்வாரியத்தினர் தெரிவித்தனர். எப்போது மீட்டர் விநியோகம் செய்யப்படும் எனக்
கேட்டால் தங்களுக்குத் தெரியாது, வந்தால் தருவோம் என மின்வாரிய அலுவலகத்தில் பதில் தெரிவிக்கின்றனர்.
மின் இணைப்புக்கு, மீட்டருக்கான தொகைகளைக் கட்டி இரு மாதங்களான நிலையிலும் மீட்டர் விநியோகம் தொடக்கப்படவில்லை. ஆனால் வணிக மும்முனை இணைப்புகளுக்கான மீட்டர் விநியோகம் மட்டும் நடைபெறுகிறது. வீடுகளுக்கு தர வேண்டிய ஒருமுனை இணைப்புக்கான மீட்டர் நிறுத்தப்பட்டதால் அவசரத்துக்கு வீடுகளுக்கு இணைப்பு தேவைப்படுவோர் தேவையே இல்லாமல் மும்முனை இணைப்பை அதிக வைப்புத் தொகை செலுத்தி பெற்றுக் கொள்கின்றனர். இதனால் மின்நுகர்வோருக்கு வீண் செலவாகிறது.
இது குறித்து மின்வாரியத் தலைமைப் பொறியாளர் பெருமாள்சாமியிடம் கேட்டதற்கு கூறியதாவது:

மின் துறை அமைச்சர்கள் மாநாடு: பகிர்மான கழகத்தை பிரிக்க திட்டம் தினமலா் செய்தி

தமிழகத்தின் மின் பகிர்மான கழகத்தை, பல நிறுவனங்களாக பிரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இது குறித்து, கேரள மாநிலம், கொச்சியில் நடக்க உள்ள மாநாட்டில், முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. மத்திய அரசின், 'மின் சட்டம் - 2003'ன் படி, மின் பகிர்மான கழகம், பல நிறுவனங்களாக பிரிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில், மின் பகிர்மான கழகங்கள் பிரிக்கப்படவில்லை. இதனால், மத்திய அரசின் நிதி உதவி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. ஒத்துழைப்பு வேண்டும்இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சியில் உள்ள, 'போல்கட்டி' என்ற நட்சத்திர ஓட்டலில், மத்திய மின் துறை அமைச்சகம் சார்பில், 6, 7ல், மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடக்கிறது. மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், மாநில அமைச்சர்கள், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், தமிழகம் சார்பில், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மின் வாரிய தலைவர் சாய்குமார், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்க, விமான டிக்கெட் எடுக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. 

இதுகுறித்து, மத்திய எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்ட் குளிர்கால கூட்ட தொடரில் நிறைவேற்ற வசதியாக, மாநில அரசுகள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்; மாநில மின் வாரியங்களின், கடன் சுமையை குறைக்க, மின் பகிர்மான கழகத்தை, பல நிறுவனங்களாக பிரிப்பதன் அவசியம் குறித்தும், மாநாட்டில் ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நன்மை என்ன?கர்நாடகா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், மின் பகிர்மான கழகம், இரண்டு, மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு, 2.80 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதனால், மின் கட்டண வசூல், தடையில்லா மின்சாரம், மின் திருட்டு உள்ளிட்ட பணிகளை திறம்பட செய்ய முடியவில்லை. எனவே, மின் பகிர்மான கழகத்தை, நான்கு நிறுவனங்களாக பிரித்தால், நிறுவனங்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு, நுகர்வோருக்கு தரமான சேவை கிடைக்கும். 
மின் தேவை சரிவு

தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட்; மின் நுகர்வு, 27 கோடி யூனிட். வடகிழக்கு பருவ மழை துவங்கியதால், மின் தேவை, 10 ஆயிரம் மெகாவாட்டாக குறையும் என, மின் வாரியம் எதிர்பார்த்தது; ஆனால், கடந்த வாரம் வரை குறையவில்லை. இந்நிலையில், இரு தினங்களாக, சென்னை உட்பட, மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருவதால், மின் தேவை, 10 ஆயிரம் மெகாவாட்; மின் நுகர்வு, 23 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் தேவை குறைந்ததால், அனல் மின் நிலையங்களில், 3,300 மெகாவாட்; நீர் மின் நிலையங்களில், 500 மெகாவாட் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.