அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு


               2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 
         இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட  மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு  2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவானது கீழ்காணும் நிதி அமைப்புகளுக்கு பொருந்தும்:-
1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்).
2. பங்களிப்பு சேம நல நிதியம் (இந்தியா).
3. அனைத்து இந்திய சேவைகள் சேம நல நிதியம்.
4. மாநிலம் ரயில்வே சேம நல நிதியம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்).
6. இந்திய ராணுவ தளவாட துறை சேம நல நிதியம்.
7. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
8. இந்திய கடற்படை கப்பல் பட்டறை workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் சேம நல நிதியம்.
10. ஆயுதப்படைகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி.

No comments: