இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Mar 31, 2013

ஆந்திராவில் மின் கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து கட்சிகள் போராட்டம்


ஆந்திர மாநிலத்தில் மின் கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு நாளை (1-ந்தேதி) முதல் அமுலுக்கு வருகிறது. முதல் 50 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 51 முதல் 100 யூனிட்வரை ரூ.3.25-ம் 101 முதல் 150 யூனிட் வரை ரூ.4.88-ம், 151 முதல் 200 யூனிட் வரை ரூ.5.63-ம் 201 முதல் 250 யூனிட் வரை ரூ.6.38, 251 முதல் 300 யூனிட் வரை ரூ.6.88-ம், 301 முதல் 400 யூனிட் வரை ரூ.7.38-ம், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.7.88-ம், 501 யூனிட்டுக்கு மேல் ரூ.8.38 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தல்; வேட்பாளர்கள் பெயர் நீக்கம் : தேர்தல் அதிகாரி ஓட்டம் தினமலர்


 திருப்பூரில், மின்வாரிய கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்தலில், வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் சங்கம் முன் நேற்று திரண்டனர். உடனடியாக, தேர்தல் அதிகாரி அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் குமார் நகரில், தமிழ்நாடு மின்வாரிய திருப்பூர் கோட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் உள்ளது.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சோதனை முயற்சியாக உற்பத்தி தொடங்கியது


மேட்டூர்:  மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்கனவே 4 யூனிட் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடக்கிறது. மின் உற்பத்தியை அதிகரிக்க, புதியதாக ரூ3500 கோடி ரூபாய் செலவில் 100 ஏக்கர் பரப்பளவில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான புதிய யூனிட் அமைக்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சோதனை முயற்சியாக மின் உற்பத்தி நடக்கிறது. புதிய அனல் மின்நிலையத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு சோதனை மின் உற்பத்தி நடத்தப்பட்டது. அப்போது ஆயில் கசிவு ஏற்பட்டதால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் சோதனை முயற்சிக்கான மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் தற்போது 320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இதை படிப்படியாக 600 மெகாவாட் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய யூனிட் முழுமையாக செயல்பட தொடங்கினால், தற்போது நிலவி வரும் மின்வெட்டு குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் பாதை கிடைக்காததால் ஜூனில் தான் மின்சாரம் ( தினமலர் )


சென்னை: கோடை காலம் நெருங்குவதால், மின் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரம், மின்பாதை கிடைக்காததால், ஜூன் மாதம் தான் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில், 4,000 முதல் 4,500 மெகா வாட் மின் பற்றாக்குறை உள்ளது. சென்னை தவிர்த்து, பல மாவட்டங்களில், 12 மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், நாளுக்கு நாள் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. கடந்த மூன்று மாதம், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மாநிலத்தின் மின் உற்பத்தி, 10 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. இதனால், மாவட்டங்களில் அமலில் இருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.

திருப்பூர் கோட்ட கூட்டுறவு சங்க தேர்தல்


                                                 கூட்டுறவு சங்க தேர்தல் 

 தமிழ்நாடு  மின்சாரவாரிய திருப்பூர் கோட்ட
பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் 
சங்கம் எண் CP 114 தேர்தல் வேட்பு மனு தாக்கல்  
இன்று 29.03.2103 வெள்ளியன்று நடை பெற்றது.

அதில் ஐக்கிய சங்கம் (TPAS) ,பாரதிய மஸ்தூர் 
சங்கம்(BMS) , மத்திய  அமைப்பு (CITU ) 
தொ.மு.ச (TMTM ) பொறியாளர்கள்  சார்பாக
உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

Mar 30, 2013

வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?


 வருமான வரி தாக்கல் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் செய்பவர்கள் கீழ்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். எனினும் இது அவர்கள் பெறும் வருமானம் மற்றும் விதிக்கப்பட்டிருக்கும் வரிக்கு ஏற்ப மாறுபடுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்

ஜூன் வரை பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும் : தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் தகவல்


 "வரும் ஜூன் மாதம் வரை, பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும்' என, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2013-14ம் ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு பரிந்துரையை, தமிழக மின் வாரியம் சமர்ப்பித்துள்ளது. மத்திய மின் தீர்ப்பாயம் உத்தரவின்படி, தமிழக மின் வாரியம், மின் கட்டண உயர்வு பரிந்துரையை, நவம்பர், 30ம் தேதியிலேயே, ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்க வேண்டும்

Mar 28, 2013

TNERC Press Release

CLICK TNERC Press Release

முன்பணம் - ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை

ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ? - விழிப்புணர்வு கருத்தரங்கு


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று காலை 10.00 மணியளவில் "ஓய்வூதியம்  - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன. 

அனைவரும் பங்கேற்பீர் !.... அனைவரையும் அழைத்து வருவீர்!...

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் சம்பளம் ஓய்வூதியத்திற்காக பிடிக்கப்படுகிறது... நினைவில் கொள்வோம்!... விழிப்புணர்வு பெறுவோம்!...

இடம் விரைவில் அறிவிக்கப்படும் ........

Mar 27, 2013

Award of cash incentive to the Government employees who have rendered 25 years of unblemished service - 03

AE/JE I Gr (Elec) Promotion to AEE Panel ordersTAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD ADMINISTRATIVE BRANCH
                                                                                   144, ANNA SALAI,
                                                                                       CHENNAI - 600 002.
Memo.No.75295/467/G1/G11/2012-65, dated.27.03.2013.

                             Sub:  Establishment - Class II Service -  Panel of Assistant
                                       Engineer/Electrical , Junior Engineer/Electrical.I.Gr and-
                                       CHD - Selected for promotion as Assistant Executive
                                       Engineer/Electrical - Orders - Issued

Mar 26, 2013

Thermal - Merger of LM with LI Fixation of Pay Clarification


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION
CORPORATION LIMITED


                                                                                                  SECRETARIAT BRANCH,                                   
                                                                  N.P.K.R.R. MAALIGAI,
                                                                 144, Anna Salai,
                                                            Chennai -  600 002.
Memo. (Per) No.6846/A3/A31/2013-1,  Dated :  22-3-2013.

                 Sub:  Settlement under section 18(1) of the Industrial
                          Disputes Act 1947 – Promotional avenue to  the        
                          Regular Work Establishment employees  in
                          Thermal Power Stations – Merger of Lineman
                          and equivalent posts with Line Inspector
                          equivalent posts – Fixation of Pay – Clarification –
                          Issued.

Mar 25, 2013

காற்றாலை மின் உற்பத்தி கைவிட்டதால் மின்தடை நேரம் அதிகரிப்பு

நாகர்கோவில்,குமரி மாவட்டத்தில் தற்போது 10 முதல் 12 மணி நேரம் வரை மின்தடை நிலவுகிறது. ராதாபுரம், பழவூர், முப்பந்தல், கயத்தாறு, கோவை போன்ற பகுதிகளில் செயல்படும் காற்றாலைகள் முடங்கியதால் மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. பருவமழையின்மை காரணமாக மின் தட்டுப்பாடு நிலவி வந்த சூழ்நிலையில் காற்று பலமாக வீசி வந்ததால் காற்றாலை மின்சாரம் சற்று கை கொடுத்து வந்தது. தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் காற்றாலைகளும் கைவிட்டுவிட்டது. 

பிப்ரவரியில் மின் உற்பத்தி 600 கோடி யூனிட் குறைந்தது

புதுடெல்லி : நாட்டின் மின் உற்பத்தி, பிப்ரவரியில் எதிர்பார்க்கப்பட்டதை விட 600 கோடி யூனிட் குறைந்தது. இது குறித்து, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் வருமாறு: பிப்ரவரியில் நாட்டின் மொத்த மின் உற்பத்தி, 7,453 கோடி யூனிட் ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது 6,847 கோடி யூனிட் ஆக குறைந்துள்ளது. மத்திய, மாநில மற்றும் தனியார் அனல் மின் நிலையங்களில் இருந்து 6,450 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 5,984 கோடி யூனிட்  மட்டுமே உற்பத்தியானது. நீர் மின்சாரமும் 685 கோடி யூனிட் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 585 கோடி யூனிட் மட்டுமே கிடைத்தது. 

Mar 24, 2013

Departmental Examinations May 2013

Departmental Examinations May 2013 அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  விளக்கத்தை காண

Admission to Part time B.E. / B.Tech. Degree courses 2013-14 for Seats in Government and Government Engineering Colleges - Tamil Version

ஆணையை   பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 

ஆணையை  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

மரபு சாரா மின் உற்பத்தி இலக்கு எட்ட வாய்ப்பில்லைபுதுடில்லி:நடப்பு நிதியாண்டில், மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகம், காற்றாலை மின் திட்டங்கள் மூலம், 2,500 மெகா வாட்டும், சூரிய சக்தி மூலம், 800 மெகா வாட்டும் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆனால், பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், காற்றாலை வாயிலாக, கூடுதலாக, 1,282 மெகா வாட் அளவிற்கும், சூரிய சக்தி மூலம், 505 மெகா வாட் அளவிற்கே மின் உற்பத்தி செய்யும் வகையில், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனவே, நடப்பு நிதியாண்டில், இவ்வகையிலான மின் உற்பத்தி இலக்கை எட்ட வாய்ப்பில்லை என, தெரியவந்துள்ளது.உற்பத்தி திறன்:சென்ற பிப்ரவரி மாத நிலவரப்படி, நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி திறன், 18,635 மெகா வாட்டாகவும், சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தி திறன், 1,446 மெகா வாட்டாகவும் உள்ளது.

CPS - பங்களிப்பு ஓய்வு ஊதியம் குறித்து தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி


CPS - பங்களிப்பு ஓய்வு ஊதியம் குறித்து தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி இதோ!

Accounts Supervisor - Selected for Promotion as Assistant Accounts Officer - Allotment orders - Issued.


:: TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD. ::
(Administrative Branch)

From
To


Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
The Chief Engineers Concerned.
The Chief Financial Controller/Chennai.
The Superintending Engineer Concerned.
The Chief Engineers/Transmission
The Chief Enginees/Hydro
The Chief Engineers/HP/Civil/Erode

Letter No.026089/670/G30/G302/2013-1, dated :23.3.2013.

Sir,

Sub:
Establishment - Class II Service - Accounts Supervisor - Selected for Promotion as Assistant Accounts Officer - Allotment orders - Issued.

AE/JE I Gr (Elec) vacancy position & Disposition list calledMOST  URGENT.

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.,
ADMINISTRATIVE BRANCH

From

Er. R.SRINIVASAN, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai  - 600 002.

To

The Superintending Engineers


Letter No.025851/338/G18/G181/2013-1, Dated  23.03.2013

                  
                   Sub :   Establishment – Class II Service – AE/JE/ELECL- I Gr.,
                                 Vacancy position and Disposition  list called  for –  Regarding.
                    
*****
                   I request you to furnish the vacancy position along with disposition list in respect of  Assistant Engineer/Junior Engineer/Electrical- I Gr.,  immediately to this office on or before  28.03.2013   by E-MAIL,  in Excel File ,   as detailed below:-

Sl.
No.
Name & Designation
DOB
Present station
Present Circle
DOJ in the Present station

                                                                            
                                                                         Yours faithfully,

                                                                             Sd./- xxx
                                                                        A.N.N.AMUDHA                                                                      ASST. PERSONNEL OFFICER/SERVICES
                                                               for CHIEF ENGINEER/PERSONNEL.

Mar 23, 2013

மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு டிப்ளமோ படித்தவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் முலம் நிரப்ப வாரியம் முடிவு

மின் வாரியத்தில் தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படிTechnical Assistant பதவிக்கு டிப்ளமோ  படித்தவர்களை  வேலைவாய்ப்பு அலுவலகம் முலம்  1000  பேரை ( எலட்ரிக்கல் 950+மெக்கானிக்கல் 50)  நிரப்ப வாரியம் முடிவு செய்துள்ளதாக  என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Technical Assistant / Internal (Mechanical & Electrical) – Relieving – further instruction issued dated 18.03.2013

CLICK VIEW ORDER 

Thanks to tnebes

ராட்சத குழாய் உடைந்து வெள்ள பெருக்கு கெத்தை மின் நிலையம் தப்பியது தினகரன் செய்தி

ஊட்டி : ராட்ச குழாய் உடைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக கெத்த மின்நிலையம் தப்பியது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மின் உற்பத்தி வட்டத்தின் கீழ் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், காட்டு குப்பை, சிங்காரா, சிங்காரா புதிய மின் நிலையம், பைக்காரா, முக்குறுத்தி, மரவக்கண்டி ஆகிய நீர் மின் நிலையங்களில் இருந்து 875 மெகா வாட் மின் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கெத்தை மின் நிலையத்தில் 5 இயந்திரங்களை கொண்டு 175 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. இதற்காக குந்தா அணையில் இருந்து பென்ஸ்டாக் பகுதி வரை டனல் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து 5 ராட்சத குழாய்களை கொண்டு மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ராட்சத குழாய்கள் மலைச்சரிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாயில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் ‘டர்பின்‘ எனப்படும் இயந்திரத்தின் மீது வேகமாக விழச் செய்வதால் டர்பின் சுற்றி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நாள் தோறும் இந்த குழாய்களில் கசிவு ஏற்படுகிறதா என ஊரூ.யர்கள் பராமரிக்க வேண்டும். 

Mar 21, 2013

Adm. Supr to AAO Promotion allotment orders


:: TAMILNAGU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD. ::
(Administrative Branch)

From

Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/Personnel,
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai, Chennai - 2.
To

The Chief Engineers concerned.

Letter No.089376/962/G31/G312/2012-3,  dated 21.03.2013.

Sir,

Sub :
Establishment - Class II Service - Administrative Supervisor - Selected for promotion as Asst. Adm. Officer - Allotment Orders - Issued.

வட சென்னையில் மின் உற்பத்தி மே மாதம் துவக்கம் தினகரன் செய்தி

சென்னை: வடசென்னை மின் உற்பத்தி 600 மெகா வாட் அலகு வரும் மே மாதம் முதல் உற்பத்தியை தொடங்கும். வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில் 3 வது 500 மெகாவாட் அலகு வரும் அக்டோபரில் செயல்படத் தொடங்கும். தூத்துக்குடியில் அமைக்கப்படும் மின் திட்டத்தில் 500 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகுகள் 2013 டிசம்பர், 2014 மார்ச்சில் உற்பத்தியை தொடங்கும். எண்ணூர் சிறப்பு பொருளார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டப்பணி 2013&2014ம் ஆண்டில் தொடங்கும். உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி பிரிவு திட்டப்பணிகளும் வரும் நிதி ஆண்டில் துவங்கும்.

தமிழக பட்ஜெட்: மின்வாரியத்துக்கு ரூ.12,197 கோடி


தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போதுள்ள அரசுக் கட்டடங்களில் சூரிய மின் உற்பத்தி கருவிகளை நிறுவுவதற்காக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயை தனியாக ஒதுக்கீடு செய்து, மொத்தமாக 11.70 கோடி ரூபாய் செலவிடப்படும்.

மின்சார மானியம் 5,197 கோடி ரூபாயையும் சேர்த்து, 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்திற்காக, மொத்தம் 12,197 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Mar 20, 2013

ETPS - RWE CADRE - CREATION AND ABOLITION OF POSTS

ஆணையை   பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 

ஆணையை  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

THANKS TO AESU

Mar 19, 2013

Departmental Examinations May 2013 APPLY LAST DATE 15.04.2013


  "அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்" வழியாக விண்ணப்பிக்கலாம்" என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

        அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

          அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


  1. Applications are invited from the candidates for admission to the Departmental Examinations May 2013 through "FULLY ONLINE" mode. Filled-up Online Application Forms will be electronically transmitted to the TNPSC Office and hence there is no need to send the application by post.
  2. Fully Online registration for Departmental Examinations, May 2013 is available for candidates applying from all the 33 Centres, from 15/03/2013 to 15/04/2013.

Mar 18, 2013

மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் தெரிவிக்க வசதி

சென்னை:"புதிய மின் இணைப்பு, பழுதான மீட்டர்களை மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களிலேயே தெரிவிக்கலாம்' என, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மாவட்டம் மற்றும் மின் வட்ட அளவில், மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் என்ற தனிப்பட்ட அமைப்பு, நிறுவப்பட்டு உள்ளது.புதிய மின் இணைப்பு விண்ணப்பம், இணைப்பு வழங்குவதில் காலதாமதம், பழுதான மின் மீட்டர்களை மாற்றுதல், மின் நுகர்வு பட்டியல் குறித்த புகார், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கிய மின் இணைப்பு தொடர்பான பிற புகார்கள் போன்றவற்றிற்கு, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தை அணுகலாம்.தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு, மின் வட்டத்திலுள்ள, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் செயல்படும். இந்த மன்றத்தின் முடிவில் திருப்தியில்லாதோர், மின் நுகர்வோர் குறை தீர் மன்ற ஒழுங்குமுறை விதிகளின் படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகத்தில் உள்ள, மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.பொதுவான முறையீடுகளை, மாநில அளவிலான மின் நுகர்வோர் சங்கத்தால், நேரடியாக மின் குறை தீர்ப்பாளரிடம் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்னிந்திய மின் தொகுப்பு தேசிய மின்பாதையில் இணைவது தாமதமாகும்


தென்னிந்தியாவை முழுமையாக தேசிய மின்பாதையில் இணைப்பதில் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா முழுவதற்குமாக ஒரே மின்பாதையில் மின்சாரம் விநியோகிக்கும் வகையில் தேசிய மின்பாதையை 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியில் மின் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அப்பகுதிக்கு உடனடியாக கூடுதல் மின்சாரம் வழங்க முடியும். தேசிய மின் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய மின் ஆணையம் மேற்பார்வையிட்டு வருகிறது. தேசிய மின் பாதையை நிச்சயித்த காலக் கெடுவுக்குள் இணைப்பதில் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்று கூறப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் ராய்ச்சூர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷோலாப்பூர் ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள மின் விநியோக அமைப்பை இணைத்துவிட்டால் ஒட்டுமொத்த தென்னிந்திய மின் தொகுப்பும் தேசிய மின் பாதையுடன் இணைக்கப்பட்டுவிடும் என பவர் கிரிட் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. தேசிய அளவில் மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது.

Mar 17, 2013

புதிய பென்சன் திட்டத்தை கைவிடக்கோரி ஏப்ரல் 10-ந் தேதி உண்ணாவிரதம்: மாநிலத் தலைவர் திருப்பூரில் பேட்டி

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் காந்திநகர் எம்.சி.மஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


                          அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் போலவே, உயர் தரத்தில், துறைத் தேர்வு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், தேர்வு எழுதுவோர், இனி அதிக கவனத்துடன் படித்து எழுத வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
                    அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டு, உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று, பதவி உயர்வு பெற, 1930ல், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப் போது, வனத் துறை, மீன் வளத்துறை, வேளாண்மை, கால்நடை, தொழில்துறை என, குறிப்பிட்ட சில துறைகள் மட்டுமே, துறைத் தேர்வு பட்டியலில் இருந்தன.

Mar 15, 2013

Most Urgent Asst (Accts) to Acct.Supervisor Promotion particulars called


Most Urgent
Preparation of panel
Assistant (Accounts) to Accounts Supervisor

:: TANGEDCO ::
(Administrative Branch)


FromEr. R. SRINIVASAN,  B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.

To

The All Chief Engineer's and  Superintending Engineer's,
Chief Financial Controller,
TANGEDCO.


Letter No.012575/155/G.29/G.292/2012-6,    dated   .03.2013.


Sub:
Establishment - Class III Service - Panel for promotion of Assistant (Accounts) as Accounts Supervisor - Particulars called for - Regarding.

"ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம்' பயனாளிகளுக்கு மின்வாரியம் "கட்டுப்பாடு' தினமலர் செய்தி

ராமநாதபுரம்:தமிழக மின்வாரியத்தின் கிடுக்குப் பிடியால், "ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம்' பயனாளிகள், பெரும்பாலானோர் மீட்டர் பெட்டி பொருத்தி, மின் இணைப்பு துண்டிப்பை தவிர்த்து வருகின்றனர்.தமிழக மின் வாரியம் மூலம் "ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம்' செயல்பட்டு வருகிறது. அதன்படி, குடிசை வீடுகள் மற்றும் அரசு சார்பில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு இலவச மின்சாரம்( ஒரு பல்ப் மட்டும்) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

AEE to EE Elec. Panel copy

ஆணையை   பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 

ஆணையை  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

CLASS III SERVICE - ASST ACCT AS ACCTS SUP PANEL


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Deputy Financial Controllers - Promotion and postings - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings  No.32                    Dated the 12th February  2013
                                                                                 Thai  30, Nanthana
                                                                                  Thiruvalluvar Aandu 2043

                                                                                 READ:-

             (Per.) CMD TANGEDCO Proceedings No.17, dated 19.01.2013

AE/JE I Gr (Mech) Promotion as AEE/Mech Particulars called


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The All Superintending Engineers/ EDC/ Generation/GCC/ P&C/ Operation all The Chief Engineers/ Thermal Power Station and Projects and the all CE’s and SE’s of Head Quarters/ Chennai-2.

Letter No.020466/167/Adm. Branch/G4/S/2013-1, dated 14.03.2013.

Sir,

Sub :
TANGEDCO - Estt. - Class II Service - Assistant Engineers/ Mechanical and Junior Engineers/ Mechanical I Grade - Suitable for promotion as AEE/ Mechanical PAR's and Service Particulars - called for - Regarding.

Mar 13, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்ப்பு


          மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் முறையாக அறிவிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியானது, ACPIN-ன் குறியீட்டு கணக்கின் படி 8% ஆக இருக்கும் எனவும், ஜனவரி 2013 முதல் கணக்கீட்டு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPEO representation Reg AE/JE to AEE Mec Promotion

Mar 9, 2013

பேட்டரி மூலம் மின் உற்பத்தி: கலசலிங்கம் மாணவர் வடிவமைப்பு: மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது dinamani.


Mar 7, 2013

Internal Selection Stores Custodian Gr.II Called for


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From
Er. R.SRINIVASAN, B.E., 
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
To
All Superintending Engineers,


Letter No. 109674/843/G.56/G.562/2013-1, dated      07.03.2013. 
Sir,

Sub:
Establishment - Class III Service - Filling up of vacancies of Stores Custodian II Grade by Internal Selection - Particulars of qualified employees - Called for - Regarding.

ஓய்வூதிய புத்தகத்தில் திருத்த மத்திய அரசு அனுமதி


குடும்ப ஓய்வூதியதாரர்கள் புத்தகத்தில் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டிருந்தால், அதை சரி செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு அளித்துள்ளது.அதன்படிகுடும்ப ஓய்வூதிய ஆணைப் புத்தகத்தில் ஓய்வூதியதாரரின் பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணையின் பிறந்த தேதி தவறாக இடம்பெற்றிருந்தால் உரிய ஆவணங்கள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம் என்று மத்திய பணியாளர் நலத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பான் கார்டு, மேநிலைக் கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் ஆகியவற்றில் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.அதோடு, பிறந்த தேதியை சரி செய்வதற்கான விளக்கக் கடிதத்தையும் சம்பந்தப்பட்ட துறைக்கு அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் பயனாளிக்குப் பிறகு அவரது பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணைக்கு தொடர்ந்து ஓய்வூதியத்தின் ஒரு பகுதி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Remote Hydro / Carven Allowance – cum – Performance incentive for employees working in Remote Hydro Stations – Release of the remaining 25 % of Performance Linked Incentive for the financial year 2009-2010, 2010-11 and 2011-12 - Regarding

நாட்டின் மின் உற்பத்தி 76,277 கோடி யூனிட்டுகள்


புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், உள்நாட்டில், 76,277 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 77, 187 கோடி யூனிட் மின்சாரத்தை விட சற்று குறைவாகும் என, மத்திய மின் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.நீர்மின் உற்பத்தி:நடப்பு நிதியாண்டில், நாடு தழுவிய அளவில், 93 ஆயிரம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பணி மாறினாலும் ஒரே பி.எப்., கணக்கு எண்:புதிய வசதி விரைவில் அறிமுகம்


புதுடில்லி:அடிக்கடி வேலை மாறுவோருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.,) கணக்கை, புதிய நிறுவனத்தில் தொடருவது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதையடுத்து, பணி மாறினாலும், ஒரே பி.எப்., கணக்கை தொடரும் வகையில், புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

காலதாமதம்:பழைய இ.பி.எப்., கணக்கையே, வேலைக்கு சேரும், புதிய நிறுவனத்திலும் தொடர, படிவம்-13ஐ பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான, நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம், அலைச்சல் ஆகியவற்றை கருதி, பலர், பழைய கணக்கை முடித்துக் கொண்டு, பணத்தை பெற்று விடுகின்றனர்.மேலும் சிலர், பழைய கணக்கை முடிக்காமல், அப்படியே விட்டு விடுகின்றனர். வேலைக்கு சேரும் புதிய நிறுவனம் மூலம், புதிதாக மற்றொரு, இ.பி.எப்., கணக்கை துவக்கி விடுகின்றனர்.