பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்: செலவை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும்: அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்


பூமிக்கு அடியில் மின் கேபிள்களை அமைக்கும் பணிக்கான செலவுகளை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ஆர்.அண்ணாதுரை (மதுரை-தெற்கு) சட்டப் பேரவையில் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பதில்:
மதுரையில் மின் கம்பிகளுக்குப் பதிலாக பூமிக்கு அடியில் கேபிள்களை பதிக்கும் பணிக்கு ரூ.35 கோடி தேவைப்படுகிறது. இந்தப் பணியானது, பணம் பங்கேற்புத் திட்டம் என்ற முறையில் செய்யப்படுகிறது. அதன்படி, பூமிக்கு அடியில் கேபிள்களை பதிக்கும் பணி தொடர்பாக மின்சார வாரியத்துக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சியானது விண்ணப்பம் அனுப்பி அதற்காகும் செலவை ஏற்பதாக ஒப்புதல் தர வேண்டும். இதன்பின், மின்சார வாரியம் சார்பில் மதிப்பீடு தயாரித்து அளிக்கப்படும். உள்ளாட்சி அமைப்பு பணத்தைக் கட்டியவுடன் மின்சார வாரியம் பணியைத் தொடங்கும்.
சித்திரைத் திருநாளுக்குத் தடையில்லா மின்சாரம்: மதுரையில் பாரம்பரிய உற்சாகத்துடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரைத் திருநாள் விழாவுக்கு கடந்த ஆண்டைப் போன்று, இந்த ஆண்டும் தடையில்லாத மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

No comments: