மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைப்பது எப்படி EB connection Aadhar link

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

* ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக தங்களது ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் 500 'கே.பி.' அளவுக்கு மிகாமல் அதனை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்திற்கோ அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கோ சென்று ஆதாரை இணைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

* முதலில் மின் இணைப்பு எண், அதன்பின்பு செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். இதன்பின்பு செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதனை பதிவிட வேண்டும்.

* அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும். சரியான தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.

* இதன்பின்பு தயாராக வைத்திருக்கும் 300 'கே.பி.' அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பின்னர், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து 'சப்மிட்' செய்ய வேண்டும். இதன்பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் வரும். இத்தோடு ஆதாரை இணைக்கும் பணி முடிவடையும்.


* வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இபி சர்வீஸில் உள்ள நியூட்ரல் மட்டும் பயன்படுத்தினால் மீட்டர் ஓடுமா? மின் கட்டணம் அதிகம் வர வாய்ப்பு உள்ளதா தெளிவான விளக்கம்

 இரண்டுக்கும் மேற்பட்ட மின் இணைப்புள்ள வீடுகளில் மின் கட்டணம் அதிகமாக வருகிறதா நியூட்ரல் மூலம் மின் கட்டணம் அதிகம் வர வாய்ப்பு உள்ளது தெளிவான விளக்கம் 




#மின்துறைசெய்திகள் #tangedconews

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click