மின் உற்பத்தியை தொடங்கும் வகையில் தூத்துக்குடி புதிய அனல்மின் நிலைய பணிகள் தீவிரம்

மின் உற்பத்தியை தொடங்கும் வகையில் தூத்துக்குடி புதிய அனல்மின் நிலைய பணிகள் தீவிரம்
தமிழகத்தில் மீண்டும் சீரான மின் விநியோகம் நடைபெறும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கேற்ப மின் திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்வார வாரியமும், நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் இணைந்து ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் புதிய அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கே. ஸ்ரீவத்சவாவும் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய அனல்மின் நிலையத்தில் மொத்தம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியை தொடங்கினால் மொத்தம் 2 ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் தூத்துக்குடியில் உற்பத்தியாகும்.

இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தீர்க்கப்படும் . இதனை அனல் மின்நிலையத்தில் முதன்மை பொறியாளர் அர்த்தநாரீஸ்வரன் உறுதிபடுத்தியுள்ளார்.


No comments: