சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொது செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 29ம் தேதி திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் கூட்டுறவு நாணய சங்கத்திற்கு வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. திருப்பூரில் 37, சங்கராபுரத்தில் 11 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டு அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. ஆனால், சில மணிநேரத்தில் அங்குள்ள அமைச்சர்களின் தலையீடு காரணமாக 2 இடங்களிலும் அதிமுகவை சார்ந்த வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அறிவிப்பு வெளியிட்டனர். இதை எதிர்த்து எங்கள் அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்து கொண்டு தேர்தலை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இந்த 2 இடங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக அமைச்சர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment