Showing posts with label மின்சார சட்டம் 2003. Show all posts
Showing posts with label மின்சார சட்டம் 2003. Show all posts

விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது

விவசாய மின் இணைப்பில் மாற்றம் மக்களிடம் ஆணையம் கருத்து கேட்பு
*******************
Notification No. TNERC/DC/ 8- /dated .03.2020 


View Download
------------------------
விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. மின் வினியோகம் தொடர்பாக, மின் வாரியம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை, ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடுகிறது.தற்போது, விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள், வேறு இடங்களுக்கு மாற்ற விரும்பினால், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விவசாயத்திற்கு பெற்ற மின்சாரத்தை, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, பல வழிமுறைகள் உள்ளன.
அவற்றில், மாற்றங்களை செய்ய, ஆணையம் முடிவு செய்துள்ளது.l அதன்படி, தமிழகத்திற்குள், விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்; இதற்கு ஏற்படும் செலவை, நுகர்வோர் ஏற்க வேண்டும்; மின் இணைப்பு பெற்ற, ஓராண்டிற்கு பின் தான் மாற்ற முடியும்l விவசாய மின்சாரத்தை தண்ணீர் இறைக்க மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழிலுக்கும் பயன்படுத்தலாம்.
ஒரே சமயத்தில், இரு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது l விவசாய மின் இணைப்பு பெற, கிணற்றுடன், 0.5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்l மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவருக்கு, மின் வாரியம் ஒப்புதல் கடிதம் வழங்கிய நிலையில், ஐந்து ஆண்டுகள் வரை விண்ணப்பம் உயிர்ப்புடன் இருக்கும்l மின் வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில், மின் இணைப்பு பெறுவதற்கு முன் அல்லது மின் இணைப்பு பெற்ற பின், மின் நுகர்வோரின் பெயரை மாற்றலாம்.
இந்த புதிய வழிமுறைகளை ஏற்படுத்த, அவை தொடர்பான வரைவு அறிக்கையை, ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றின் மீது, ஏப்ரல், 6ம் தேதி வரை, கருத்துக்கள், ஆலோசனை மற்றும் எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என்றும், ஆணையம் தெரிவித்துள்ளது.
Source: dinamalar.

மின்சார சட்டத் திருத்த மசோதா முகநுாலில் பகிா்ந்த கருத்துக்கள்

நரேந்திரமோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியை துவக்கிவிட்டது. 

மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. 
இந்த மசோதாவை தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 18 மாநில அரசுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. பல்வேறு கட்சிகள் தங்களது பிரதிநிதிகள் மூலமாக நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

மின்சார சட்டம் 2003 : திருத்தம் கோரும் மின்வாரிய சங்கங்கள்

சென்னை, செப். 25 -தேசிய மின்சார பொறியாளர் மற் றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு கூட்டம் 23.9.2014 அன்றுசென்னையில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் வி.இராமச்சந்திரன், எம்.தங்கவேலு சம்மேளனம் சார்பாகவும், எஸ்.எஸ்.சுப்ரமணியன், கே.விஜயன், மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாகவும், சிங்கார ரத்தின சபாபதி, எம்.சடாட்சரம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும், அப்பர்சாமி, சங்கர நாராயணன், பொறியாளர் கழகம் சார்பாக வும், வி.அசோக்குமார், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார் பாகவும், கே.அருள்செல்வன், தி.அறி வழகன் தமிழ்நாடு மின்வாரிய பொறி யாளர் அமைப்பு சார்பாகவும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்த பின்னரும் 40 சதவீதம் இந்திய மக்களுக்கு மின்சாரம் கனவுப் பொருளாகவே உள்ளது என்றும் மின்துறையில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உழைப்புச்சுரண்டலை அமலாக்குவது போன்ற வைகள் சம்பந்தமாக பரிசீலித்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சேவைத்துறையாம் மின்துறையை பொதுத்துறையாகவே பாதுகாத்திட மின்சாரச் சட்டம் 2003ல் திருத்தம் செய்வது, ஒப்பந்த தொழிலாளிகளை பணிநிரந்தரம் செய்வது, மின்வாரிய பிரிப்பு அம லாக்கத்தையொட்டி, ஏற்பட உள்ள முத் தரப்பு ஒப்பந்தத்தை காலதாமதமின்றி ஏற்படுத்திட வேண்டும்.
தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து அனைவருக் கும் மின்சாரத்தை அளித்திட வேண்டும். உபகோட்டத்திற்கு ஒரு மின்தடை பழுதுநீக்கும் மையம் உருவாக்குவது. களப்பிரிவு மற்றும் அலுவலகப் பிரிவு களில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கி உடனடியாக நிரப்பிட வேண்டும்.வாரியத்தின் வருவாயை முறைப் படுத்திடும் வகையில் அட்டைப்பட்டியல் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப் பிடுவது, புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட் டத்தை அமலாக்குவது, சிபிஎஸ் திட்டத் தில் பணம் பிடித்ததற்கு சரியான கணக்குவிபரச் சீட்டை உடனடியாக வழங்கிடு வது.
ஆண்டிற்கு ஒரு முறை களப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் மார்சு 31க்குள் முதன்மை பட்டியல் வழங்கிடுவது, பதவி உயர்வுஒதுக்கீடு, ஊர் மாற்றங்களில் வாரியவிதிமுறைகளை முறையாக அமல் படுத்திடுவது ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர் களுக்கு தேவையான அடிப்படை வசதி களை உடனடியாக செய்து தருவது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து8.7.2014 அன்று தேசிய மின்சார பொறி யாளர் மற்றும் தொழிலாளர்களின் கூட் டமைப்பு முடிவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் முழக்கங்களை தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தி யில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணைப்புக்குழு சங்கங்கள் எதிர் வரும் 14.10.2014 அன்று மின்வாரிய அலுவலகங்கள் முன்னர் பிரச்சார கூட்டங் களை நடத்திட முடிவு செய்துள்ளது
நன்றி தீக்கதிர்