தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?


 தமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத்  தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.
 
 
           தமிழகத்தில் நிதித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 44 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர் கள் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் பணியாற்று கின்றனர். இந்த ஊழியர் களுக்கு அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஆசிரியர்களும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் அரசு ஊழியர்க ளாகவே கருதப்படுகின்றனர்.

          கடந்த 1980 முதல் 84 வரை லட்சகணக்கான ஊழியர்கள் அரசு துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக 1984ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அரசு ஆணை 996ன்படி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அப்போது பணியில் சேர்ந்தவர்களில் 58 வயதை கடந்தவர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். இதில் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஓட்டுமொத்தமாக பலர் ஓய்வு பெறுகின்றனர்.

         2012ம் ஆண்டு ஏராளமானவர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. 2012ம் ஆண்டை விட 2013, 2014ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

             அதாவது, 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஸி8 லட்சமும், ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி10 லட்சமும், ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி15 லட்சமும், ‘ஏ’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி20 லட்சம் வரையிலும் ஓய்வூதிய பணப்பலன்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது.

           இதனால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, சட்டத்துறையில் உயரதிகாரிகள் அரசுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தலாம் என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஓய்வு வயது 60ஆக உள்ளது. எனவே, அதேபோல் இங்கும் மாற்றுவதற்கு அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

              இவ்வாறு ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தும் போது, ஓய்வு கால பணப்பலன்களை சில ஆண்டுகள் தள்ளி போட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் கருதப்படுகிறது. எனினும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு நடந்து வரும் சட்ட பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிடப்படலாம்  என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

15 லட்சம் ஊழியர்கள்

              தமிழகத்தில் அனைத்து சலுகைகளை பெறக்கூடிய தகுதியில் 4 லட்சம் ஊழியர்களும், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் 3.15 லட்சம் பேரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 7 லட்சம் பேரும், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்களும் என மொத்தம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click