புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இறப்பு / இயலாமையால் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை பெற தற்காலிகமாக அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவு


புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ நமோ நாராயன் மீனா அவர்கள் அளித்த பதில் உரையில், ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய விதிகளின் படியே புதிய பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களில் இறப்பு / இயலாமை ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர் / ஊழியர் குடும்பங்களுக்கு பணிக்கொடை தற்காலிகமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், ஓய்வூதியத்தில் மட்டும் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டதே தவிர பணிக்கொடை மற்றும் ஏனைய பலன்களில் எவ்வித மாற்றமும் மத்திய அரசு செய்யவில்லை என்று நேற்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்த மத்திய அரசு சுற்றறிக்கை எண்.38/41/06-P & PW(A) நாள்.5.5.2009 அன்றைய தேதியில் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பெற  குறைந்தபட்சம் 5 வருடம் அரசு பணியில் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கொடையானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு 1/2(சம்பளம்)வீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மொத்த ஊதியத்தில் 16-1/2மடங்கு(கடைசியாக பெற்ற ஊதியம்) அல்லது ரூ.10 லட்சம், இவற்றில் எது குறைவோ அந்த தொகை ஓய்வோ பெறுபவருக்கு வழங்கப்படும். பணியின் போது ஒரு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்திற்கு கீழ்கண்ட கணக்கின் படி பணிக்கொடை வழங்கப்படும்.
:
Sl. No.
Length of Qualifying Service
Rate of Death Gratuity
1.Less than one year2 times of emoluments
2.One year or more but less than 5 years6 times of emoluments
3.5 years or more but less than 20 years12 times of emoluments
4.20 years or moreHalf of emoluments for every completed
six monthly period of qualifying service
subject to a maximum of 33 times of emoluments.
Maximum amount of Death Gratuity admissible is Rs, 10 lakh with effect from 1.1.2006.  

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click