2,500 மெகாவாட் மின் உற்பத்திக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது (dinakaran)


தமிழகத்தில் 2,500 மெகா வாட் மின் உற்பத்திக்கு சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். அதிமுக அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பேரவையில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் ஜாதி, மத பிரச்னையை கிளப்பி வன்முறை தூண்டினால் அந்த அமைப்புகள் தடை செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்ததும் அப்படியே அடங்கி விட்டது. மார்க்சிஸ்ட் உறுப்பினர் பேசுகையில், மின் பிரச்னை பற்றி குறிப்பிட்டார். மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்த குறிப்பிட்ட காலம் ஆகும். 3 முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகும்.

எந்த திட்டத்திற்கும் கால அவகாசம் வேண்டும். இந்த அரசின் முயற்சியால் 2 ஆண்டுகளில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ணூர், வடசென்னை, வள்ளூர் மின் நிலையங்களில் ரி2,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.  



இதுதவிர உடன்குடி, எண்ணூர், வடசென்னையில் 3,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பணிகள் தொடங்கும் நிலையை உருவாக்கி இருக்கிறோம். ஒரு ஒப்பந்த புள்ளி கோர ஒன்றரை ஆண்டு ஆகும். இதற்காக மத்திய அரசிடம் பல்வேறு அனுமதிகள் பெற வேண்டியுள்ளது. மத்திய அரசு பல முட்டுக்கட்டைகள் போட்டாலும் இதை செய்து இருக்கிறோம். 

 இதுதவிர மின் கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கியுள்ளோம். காற்றாலை மின் உற்பத்திக்கு கடந்த ஆட்சியில் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இந்த ஆட்சியில் கயத்தாறு முதல் சோழிங்கநல்லூர் வரை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. 19 லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளது என்றார். 

1 comment:

krishnamoorthymoorthy said...

varaverkkavendia...arasin...nadavadikkai...???/krishnamoorthy/gobi..18.5.2013