கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேடூரில் அமைக்கப்பட்ட புதிய அனல் மின்நிலையம், 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளது.
மேட்டூரில் ஏற்கனவே 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அனல் மின்நிலையத்துக்கு அருகிலேயே 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையம் சுமார் ரூ.3,500 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
இந்த மின்நிலையத்தில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக சோதனை ஓட்டத்தில் 100 மெகாவாட் வீதம் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட சிறு, சிறு பழுதுகள் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, அந்த பழுதுகள் நீக்கப்பட்டவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
இதன் அடிப்படையில் நடைபெற்று வந்த மின் உற்பத்தியானது நேற்று மாலை அதன் முழு உற்பத்தி திறனான 600 மெகாவாட்டை எட்டியது. நிலக்கரி கிடைக்கும் அளவை பொறுத்து இந்த மின் உற்பத்தி அமையும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment