மின் கட்டணம் திருத்தம் கருத்து கேட்பு கூட்டம் : மக்களை பாதிக்காத வகையில் இருக்கும்



 மின் கட்டணம் திருத்தம் கருத்து கேட்பு கூட்டம் : மக்களை பாதிக்காத வகையில் இருக்கும்
சென்னை, மே 03 (டி.என்.எஸ்) இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மக்களை பாதிக்காத வகையில் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவிப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:

பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ):- மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை திருத்த கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது. இதனால் மக்களிடையே மின் கட்டணம் உயரும் அச்சம் உள்ளது. எனவே மின் கட்டணம் உயர்த்தபபடுமா?

அமைச்சர் நத்தம் விசுவநாதன்:- தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் பேரில் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. அதன்பேரில் இன்று சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.


பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு முடிந்ததும் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று மின் கட்டணத்தை மாற்றி அமைக்கப்பட வேண்டுமானால் பொது மக்களை பாதிக்காத வகையில் முதல்- அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.

இவ்வாறு அவர்  கூறினார். (டி.என்.எஸ்)

No comments: