காற்றாலை மின்சாரம் கொள்முதல் நிறுத்தம் ஏன்? அமைச்சர் விளக்கம்


சென்னை: மின் கட்டமைப்பின் பாதுகாப்பு கருதித் தான், காற்றாலை மின் கொள்முதல் நிறுத்தப்படுகிறது,'' என, மின் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.அவர் பேசியதாவது:
காற்றாலைகள் மூலம், 3,000 மெகா வாட் (14ம் தேதி) மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 5.8 கோடி யூனிட்டுகள் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. இருப்பினும், ஒரு சில நேரங்களில், கொள்முதலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதிர்வெண் கட்டுப்பாடு விதித்து உள்ளது. இந்த அதிர்வெண்ணை தாண்டினால், மின் கட்டமைப்பு பழுதாகும்.மின் கட்டமைப்பின் பாதுகாப்பு கருதியே, காற்றாலை மின் கொள்முதலை, மின்வாரியம் தடை செய்கிறது. காற்றாலை மின் கொள்முதலுக்கான தொகை, கடந்தாண்டு செப்., மாதம் வரை வழங்கப்பட்டு உள்ளது.மீதமுள்ள மாதங்களுக்கான மின் கொள்முதல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், பல்வேறு ஆதாரங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு, 3,400 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை வைத்து விட்டனர்.கடந்த இரு ஆண்டுகளில், இந்த மின் கொள்முதலுக்கான நிலுவைத் தொகையையும், வாரியம் செலுத்தி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

Unknown said...

அமைச்சரின் யாருக்குப் புரியுமோ?