"மின் வாரிய ஊழியர் ஊதிய ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்' - நத்தம் விஸ்வநாதன்


சென்னை : ""மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்,'' என, நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தங்கவேல், ""மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குழு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட வேண்டும். அதற்கான நேரம், தற்போது எழுந்துள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்த குழு கூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இதற்கு, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்:
மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக, மின் வாரிய தலைவர் தலைமையிலான குழு, அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அழைத்து பேசி, ஊதிய உயர்வை விரைவில் இறுதி செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: