மின்சாரத் துறை பற்றி இந்தியன் குரல் வலைதளத்தில் வந்த பதிவு


http://vitrustu.blogspot.in/2013/05/blog-post_8768.html?utm_source=feedly


அலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். எல்லை மீறிய மின்வாரிய ஊழல் எதற்கும் துணிந்த அதிகாரிகள் 
இந்நிலை என்று மாறும்?

 காற்று திசை மாறி மாறித் தான் வீசும்
 இனி மக்கள் பக்கம் நன்மை உண்மை நேர்மை 
என்ற காற்று வீசும் நண்பா- நீ நினைத்தால்

திறமையற்ற நிர்வாகத்தினால் தேவைக்கு ஏற்ற சுய உற்பத்தி இல்லை தமிழ்நாடு மிசார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக, சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு ஒரு யூனிட் 15 ரூபாய் வரை மின்சாரம் வாங்கப்படுகின்றது. இதனால் 12500 கோடி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போதுள்ள மின்கட்டணம் 1-4-2012 முதல் நடைமுறைக்கு வருமாறு 30-3-12 அன்று ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டது 

மின்சட்டம் 2003 இன் படி ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டண விகிதம் மாற்றம் செய்யப்படவேண்டும் அந்த வகையில் ஆணையம் 1-4-2013 முதல் புதிய கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசு மின் கட்டண உயர்வை தற்போது தள்ளிப்போட நினைக்கின்றது 

அதன் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  ஒழுங்கு முறை ஆணையத்திடம் புதிய மின் கட்டணம் மற்றும் வருவாய் பெருக்கத்திற்கான அனுமதி கேட்டு 221-2-2013 அன்று மனு செய்துள்ளது அதன் முழு விபரம் இந்த இணைப்பில் உள்ளது

http://tnerc.tn.nic.in/download/Tariff%20Petition/2013/Tariff%20Petition%2013-14.pdf

மின் வாரியம் மனு செய்யத் தவறும் பட்சத்தில் ஆணையமே வரும் ஆண்டின் இழப்பை கணக்கிட்டு புதிய கட்டணங்களை அறிவிக்க மின் சட்டம் வழிவகை செய்கிறது. அப்படி ஆணையம் தன்னிச்சையாக செயல்பட்டுவிடக் கூடாது ஆனால் புதிய மின்  கட்டண விகிதங்களைக் கேட்டு ஆணையத்தில் மனு செய்யவேண்டும் ஆனால் மக்கள்  கடுமையான மின்வெட்டை அனுபவித்து வரும் இன்றைய நிலையில் மக்கள் கோபத்திற்கு அரசு ஆளாகக் கூடாது என்ற அடிப்படி திட்டத்துடன் மின் வாரிய மனு அமைந்துள்ளது 

சென்ற ஆண்டு சுமார் 8500 கோடி இழப்பு வரும் என்று கணக்கிட்டு அதன் படி மின் கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டது ஆனால் அந்த 8500 கோடி அல்லாமல் 9000 இழப்பு ஏற்ப்பாடுள்ளதாக கணக்குத் தணிக்கையில் காட்டும் மின்வாரியம் மின்கட்டண உயர்வாக தற்போது கேட்டுள்ளதொகை சுமார் 950 கோடி மட்டுமே அதுவும் விவசாயம் மற்றும் குடிசை வகைக்கு மட்டும் புதிய மின்கட்டண உயர்வு கேட்டுள்ளது அதையும் அரசே மானியமாக கொடுத்துவிடும் . மற்ற வையினருக்கு இப்போதைக்கு மின்கட்டண உயர்வு இல்லை முந்தைய ஆண்டு நிலையே தொடர வேண்டும் என்ற கோரிக்கையை மின் வாரியம் ஆணையத்திடம் கேட்டுள்ளது .

அதாவது முந்தய ஆண்டு 8500 கோடி இழப்பிற்கு மின் கட்டணம் உயர்த்தியே ஆகா வேண்டும் என்று சொன்ன மின்வாரியம் தற்போதைய 9000 கோடி இழப்பிற்கு மின் கட்டணம் உயர்வு தேவை இல்லை என்று சொல்கின்றது.

எப்படி இது சாத்தியமாகும். இங்கே தான் சூட்ச்ச்சமம் இருக்கின்றது நண்பர்களே கவனமாக படியுங்கள் 

அதே மின்வாரியம் அளித்துள்ள மனுவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2013-14,2014-15,2015-16 ஆகிய ஆண்டுகளுக்கு மொத்த வருவாயாக மின் நுகர்வோரிடம் இருந்து சுமார் 39000 கோடி ரூபாயை கட்டண உயர்வின் மூலம் நினைத்த நேரத்தில் கட்டண உயர்வு மூலம் பெற அனுமதி கேட்கின்றது. அதாவது கட்டண உயர்வு இல்லை என்று சொல்லிக்கொண்டே கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்கின்றது மின் வாரியம். 

ஒவ்வொரு ஆண்டும் புதிய மின்கட்டண விகிதம் மாற்றி அமைக்கலாம் எனும் போது மூன்று ஆண்டுகள் ஒட்டுமொத்தமாக உயர்வுக்கு அனுமதி கேட்பதன் நோக்கம் என்ன? அனுமதி கிடைத்துவிட்டால்  நினைத்த நேரத்தில் நாளையே கூட எப்போது வேண்டுமானாலும் தேர்தல் முடிந்தவுடன் அல்லது அதற்க்கு முன்பாகவே கூட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப் படாமலேயே ஏற்க்கனவே மக்கள் கருத்து இதற்கும் சேர்த்தே கேட்டுவிட்டோம் மக்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்  என்று மின் கட்டணத்தைக் கூட்டலாம். அதற்கும் சேர்த்தே மறைமுகமாக இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இப்பொழுது நடந்து வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எதிர் கால மின் கட்டண உயர்வுக்காகவும் சேர்த்தே நடத்தப் படுகின்றது என்பதை மறந்துவிட வேண்டாம் தோழர்களே. 

தற்போது மின் கட்டண உயர்வு விவசாயம் குடிசை இனங்கள்( ஏற்க்கனவே அரசு மானியமாக இலவசமாக வழங்கி வருகின்றது) தவிர பிற இனங்களுக்கு இல்லை என்று சொல்லி  அரேசே மானியம் தரக்கூடிய இனங்களுக்கு மட்டும்  உயர்வு என்று மின் வாரியம் வைத்த கோரிக்கை மனு மீது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திடத் தேவையில்லை.


எதிர்காலக் கட்டண உயர்வுக்கு இப்பொழுதே மறை முகமாக அனுமதி வாங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மின்வாரியம் சூட்ச்சமமாக நைசா மக்களுக்கு தெரியாத புரியாத விளங்கிக் கொள்ளாத வகையில் கோரிக்கை வைத்துள்ளது என்பதை அறியுங்கள்.

ஆணையமும் ஒன்னும் தெரியாத அப்பாவியாக இருப்பது போல் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திட அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. 
மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவதற்கான ஆணை இந்த இணைப்பை சொடுக்குங்கள்

http://tnerc.tn.nic.in/press%20release/2013/Public%20Notice-22-04-2013-Tamil.pdf


அதன்படி முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில்  3-5-13 வெள்ளிக்கிழமை காலை பத்துமணி முதல் மாலை வரை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தியது. இக்கூட்டத்தில் நடைபெற்ற விபரம் இறுதியில் உள்ளது தவறாமல் படிக்கவும்  

அடுத்த கூட்டம் 8-5-2013 திருச்சியிலும் 10-5-2013 அன்றைய கூட்டம்  மதுரை மாநகரிலும் 17-5-2013 அன்று கோவையிலும் நடத்திட ஏற்பாடு செய்துள்ளது 

03-05-2013 அன்று மின்சார ஒழுங்கு முறை ஆணைய மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொது மக்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் 

1 மின் வாரியம் கோரியுள்ள மின் கட்டண விகிதத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சமர்ப்பித்துள்ள மனுவினத் தள்ளுபடி செய்யவேண்டும். முறையான மனு தாக்கல் செய்ய அல்லது ஆணையமே தன்னிச்சையாக புதிய மின்கட்டண விகிதங்களை அறிவிக்க வேண்டும்

2  சென்ற ஆண்டு 8500 கோடி இழப்பு வரும் என்று கணக்கிட்டு மின் கட்டண உயர்வு வேண்டும் என்று இதேபோல் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மக்களின் கருத்துக்களை சிறிதும் ஏற்காமல் கடுமையான ( சுமார் 30% வரை) மின் கட்டண உயர்வு அறிவிப்பு செய்தீர்கள் நாங்களும் உயர்த்திய கட்டணத்தை தவறாமல் கட்டிவருகின்றோம் அப்படி இருக்க அந்த 8500 கோடிக்கும் மேலாக நீங்கள் மத்திப்பிட்ட தொகைக்கும் மேலாக தற்போது 9000 கோடி ரூபாய் இழப்பு எப்படி வந்தது . 100 கோடி கூடலாம் குறையலாம் 9000 கோடி ரூபாய் இழப்பு வரும் என்று அலுவலர்களுக்கு கணக்குத் தணிக்கை அலுவலர்களுக்கு ஆணையத்திற்கு தெரியாமல் போனதா ? 

இதற்க்கு மின் வாரிய அலுவலர் பதில் சொல்கின்றார் நிலக்கரி விலை நாங்கள் எதிர் பார்த்ததை விட கூடுதக்லாக 35 சதவீத்தத்திர்க்கும் மேல் ஏற்றிவிட்டார்கள் ஆகவே உற்பத்தி செலவு ஒரு யூனிட்டிற்கு 6.5 ரூபாய் ஆகிறது மக்களுக்கு 4 ரூபாய் 5 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம் ஆகவே இந்த இழப்பு வந்தது.

ஒரு ஆண்டில் மொத்த நிலக்கரி சுமார் 5000 கொடிக்குத் தான் வாங்கியிருக்கின்றார்கள்  இதில் அவர்கள் சொல்லும் விலை ஏற்றம் 35 சதவீதம் என்றால் சுமார் 1800 கோடி ரூபாய்தான் இழப்பு மின் வாரியத்திற்கு ஏற்ப்பட்டிருக்க வேண்டும் 

அடுத்து மின் நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு மின் வாரியம் கொடுக்கவில்லை மின் வாரியம் நினயத்த தொகையை அரசு மானியமாக வழங்குகிறது மக்களுக்கு குறைந்த விலைக்கு கொடுப்பதால் நஷ்ட்டம் என்ற பதில் முழுக்க பொய்யாகிறது . இதன்படி விளக்கம் கேட்டார்கள் பதில் ஆணையமோ மின்வாரியத்திடமோ பதில் ஏதும் சொல்லவில்லை. ஆணைய உறுப்பினர் வேணுகோபால் அவர்கள் இது விவாத மேடை அல்ல மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இதற்க்கு இங்கே பதில் சொல்ல முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மின் வாரிய அலுவலர்களை பதிலுரை ஈன் பேசச் சொன்னீர்கள் அவர்கள் சொல்லும் பதிலில் பொய் இருந்தால் தவறு இருந்தால் நாங்கள் கேட்போம் என்கலுக்கு ப்விலக்கம் சொல்வதில் என்ன சிரமம் இருக்கின்றது என்றோம் மயான அமைதி பதில் இல்லை.

3 சென்ற ஆண்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூடம் நடத்தி ஆணையம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 24 உத்தரவுகளை இட்டதே இன்று வரை ஒரு உத்தரவைக் கூட நிறைவேற்றவில்லையே ஆணையத்திற்கு உள்ள அதிகாரத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க்ப்ம் படவில்லையே என்?

பதில் இல்லை 

4 குத்தாலம் மின் உற்பத்தி நிலையம் கடந்த ஒரு ஆண்டாக செயல் படாமல் வைத்திருப்பது ஏன் ? தனியார் உற்பத்தி நிலையங்களை வாழவைக்க வேண்டும் என்ற நோக்கமா ? ( 16 மின் உற்பத்தியாளர்கள் அதிகப்படியான விலை வேண்டி சுமார் 720 கோடி மின் வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் ஆணையத்தின் ஒரு உறுப்பினர் வாங்க மறுப்பதாகவும் ஆனாலும் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அலுவலக் ஊழியர்கள் பேசிக் கொள்வதாக சொல்கிறார்கள் இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பேசப் படுகின்றதாம் )

மின் வாரிய அலுவலர் பதில் சொல்கிறார் அங்கே பழுதடைந்த கருவி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவி  அதுவும் உத்திர வாத காலத்திற்குள் பழுதானதால்  மற்றும் வெளி நாட்டிலிருந்து வரவேண்டியுள்ளதாலும் காலதாமதமாகிறது . என்று கூசாமல் ஆணையத்தையும் அங்குள்ள மக்களையும் பொய்யான தகவலைச் சொல்லி ஏமாற்றுகிறார் .

அப்பொழுது குறுக்கிட்ட நண்பர் அந்தக் கருவி BHEL நிறுவனம்தான் வழங்கியது அன் நிறுவனம் இந்தியாவில் தான் உள்ளது அதற்கான ஆதாரம் உள்ளது என்று கூறியவுடன் அந்த அலுவலர் அதற்கு மேல் பொய் பேச முடியாமல் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

5 மின்  வாரிய ஊழல்களைக் களைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டது? சென்ற ஆண்டு இதே கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஒரு அலுவலர் லஞ்சம் பெற்ற குற்றம் செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்  ஆனால் பிடிபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வுடன் இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்ட புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது 

பதில் இல்லை 

6 தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டாம் என்று சென்ற கூட்டத்தில் தெரிவித்தோம் அதை கேட்காமல் அனுமதி வழங்கிய ஆணையத்தின் விலை நிர்ணய ஆணையையும் மதிக்காமல் அதிக  விலைக்கு மின்சாரம் வாங்க  ஒப்பந்தம் போடப் பட்டது எப்படி? அவர்கள் ஒப்பந்தம் போட்டதால் மின் வாரியத்திற்கு 12500 கோடி ரூபாய் செலவு ஆயிற்றே அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன் ?

பதில் இல்லை 

7 காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின் சாரம் உற்பத்தி நிறுத்துங்கள் என்று வாய் வழி உத்தரவு போடப் படுகிறதே  காரணம் என்ன? 

பதில் இல்லை

 உல் கட்டமைப்பு வசதி செய்யப்பட வில்லை அதுதான் காரணம் என்று நமக்கு தெரியும் 2003 ஆம் ஆண்டு மின் சட்டப்படி இந்தியா முழுவதும் 2006 ஆம் ஆண்டுக்குள் முன் உற்பத்தி மற்றும் மின் பக்ரிமானக் கழகம் அனைத்து உல் கட்டமைப்புகளையும் செய்து முடித்திருக்க வேண்டும் என்ற  ஆணை இடப்பட்டுள்ளது ஆனால் அதை நடைமுறைப் படுத்தவில்லை அதை ஏன் என்று கேட்கவேண்டிய ஆணையமும் இன்று வரை கேட்கவில்லை உல் கட்டமைப்பு  வசதி இலாத காரணத்தினால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் பொது ஒரு சில் காற்றாலை நிறுவனங்களை அலுவலர்களை கவனிக்காத என்ற வார்த்தை இங்கு அவசியமாகிறது வாய் வழி  உத்தரவு மூலம் மின் உற்பத்தியை நிறுத்தக் கேட்கிறார்கள் நிறுத்தத் தவறினால் இவர்களே அந்த குறிப்பிட்ட மின் மாற்றிக்கு தடை ஏற்ப்படுத்துகிறார்கள்

8 கடந்த 15 ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் வருமானத்திற்கு மேல் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் முழுதும் மின் வாரியத்தின் சொத்தாகும் அதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தால் மின் வாரியம் நஷ்டம் ஈடு செய்ய முடியுமே அதற்க்கு ஏன் முயற்சி செய்யவில்லை 
இந்த கேள்விக்கும் பதில் இல்லை அவ்வாறு ஆணையிட ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது 

9 மின் திருட்டை ஒலிக்கவில்லையே  லைன் லாஸ் மின் இழப்பைக் குறைக்க எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லையே 

நேரடி பதில் இல்லை கதை தான்  சொல்லப்பட்டது

10 சென்ற கருத்துக் கேட்புக் கூடத்தில் பெர்ம்பான்மை மக்கள் சொன்ன கருத்து என்ன அதன் அடிப்படையில் ஆணையம் செயல்பட்டதா அல்லது யாருடைய வர்ப்புருத்துதல் பேரில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டதா ?
பதில் இல்லை  

இவ்வாறான பெரும்பான்மை ஆதாரங்களுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை 

சாமானிய மக்களுக்கு இவ்வளவு தகவல்கள் தெரிந்து இருக்கும்போது (தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற்று பெற்ற அந்த தகவல்களை  ஆராய்ந்து ஆதாரங்களுடன்) கணக்குத் தணிக்கைத் துறைக்கு ஒன்றும் தெரியாதா? மின் வாரிய ஊழல் தடுப்பு அலுவலர்களுக்கு தெரியாதா? மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று கூடுதல் போனசாக ஆணையர் பதவி வகிக்கும் ஆணையர்களுக்கு தெரியாதா எல்லாம் தெரியும்.அவர்களுக்கு தெரிந்தே தவறு செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் 

மக்கள் முன்பு போல் இல்லை என்பதற்கு ஆதாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு பேசிய கேள்விகள் கேட்ட பெரும்பான்மை மக்கள் உதாரணம் . அதிகப்படியான மக்கள் இவ்வாறு கேட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்திற்காக சரியான விளம்பரம் இல்லாமல் ஒருநாள் முன்னதாக செய்தியை வெளியிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துகிறார்கள் 

நீங்கள் ஒரு மணி நேரம் முன் அறிவிப்பு செய்தாலும் உங்கள் ஊழலை 
உங்கள் தவறுகளை சுட்டிக் காட்ட இனி எப்போதும் மக்கள் வருவார்கள் என்பதற்கு இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களே முழு  உதாரணம் இனி இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.

மின்வாரிய அலுவலர்களே இனியும் லஞ்சம் வாங்காதீர்கள் நேர்மையாக மக்கள் பணி செய்யுங்கள் உங்களை 8.5 கோடி மக்களும் வாழ்த்துவார்கள் உங்கள் குடும்பம் பிள்ளைகள் நீங்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ககாலம்  புகழுடன் வாழ்வீர்கள் 

மாறாக தவறு செய்து மக்களை ஏமாற்ற நினைத்தால் சொத்து சேர்க்க நினைத்தால் 8.5 கோடி மக்களின் சாபம் உங்களையும் உங்களது பிள்ளைகளையும் சும்மா விடாது என்பதற்கு பல உதாரணங்களை நீங்களும் அறிவீர்கள்.  அந்த நிலை உங்களுக்கு வரக் கூடாது என்பதே எங்களது ஆவல் 

மக்கள் விழித்துக் கொண்டார்கள் மின் வாரிய அலுவலர்களே  திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள் சட்டப்படி நடவடிக்கை பாயும் உங்களது சுய மரியாதை இழக்க நேரிடும் உங்கள் குடும்பம் உங்கள் சொத்து உங்களது கட்டுப் பாட்டில் இருக்காது எவ்வழி வந்ததோ அவ்வழியே போய்விடும்( வலைகிளிருந்து தப்பிக்க லஞ்சமாக கொடுத்தே அளிக்க நேரிடும் என்பதை மறவாதீர்கள்) உங்களைக் காக்க பாதுகாக்க எந்த அரசியல் வதியும் உயர் அலுவலர்களும் வர மாட்டார்கள். பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலை வரும் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துவிடாதீர்கள் ஆயிரம் லட்சம் கோடி வைத்திருந்தவர்களும் சட்டத்தின் மூலம் தண்டனை பெரும சட்டம் தான் நமது சட்டம் என்பதை நினைவில் வையுங்கள் தோழர்களே. உங்கள் நலனுக்காக வேண்டுகின்றோம் இன்றே திருந்துங்கள் இல்லையேல் நாளையே வருந்துவீர்கள் .


லஞ்சம் வாங்கும் அலுவலர்களை பற்றிய புகார்கள் செய்ய அலுவலக நடைமுறைகள் திட்டங்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை தயார் செய்ய மற்றும் எந்த அலுவலகத்தில்  யாரிடம் எப்படி கொடுப்பது நிலுவையில் உள்ள உங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய  தகவல் பெற சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள நீதி மன்றத்தில் வழக்குரைஞர் இல்லாமல் நாமே வாதாட நுகர்வோர் மன்றம் மனித உரிமை மீறி குறித்த சட்டங்கள் அறிய மனு செய்ய இலவச பயிற்சி மற்றும் ஆலோசனைகள் பெற இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஒவ்வொரு மாதமும் சென்னையில் 1 மற்றும் 15 தேதிகளில் காலை 10 மணிக்கு  முன்பதிவு செய்து நேரில் வரவும். இந்தியன் குரல் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் கட்டணம் இல்லை எந்த சேவைக்கும் உதவிக்கும் கட்டணம் இல்லை என்ற கொள்கையுடன் ஊழலை அறவே  ஒழிக்க செயலாற்றி வருகிறது 

1 comment:

nikki0505 said...

அருமையான மிகவம் பயனுள்ள கருத்துக்கள்