அனல்மின் உற்பத்தியில் கூடுதலாக கிடைத்த 150 மெகா வாட் dinamalarnews


சென்னை: அனல் மின் உற்பத்தியில், நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்த உற்பத்தி திறனை காட்டிலும், கூடுதலாக, 150 மெகாவாட் அளவிற்கு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், எண்ணூர், வடசென்னை, வல்லூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய, ஐந்து இடங்களில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த உற்பத்தி திறன், 2,970 மெகாவாட். தொடர்ந்து, காற்றாலைகளில் இருந்து, 2, 500 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால், மின் தடை நேரம் கணிசமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், காற்றாலைகளில் இருந்து கிடைத்து வந்த மின்சாரத்தின் அளவும் குறைந்தது.
அனல் மற்றும் காற்றாலைகள் மின் உற்பத்தி குறைந்ததால், மின் தடையின் நேரம், மீண்டும் அதிகரித்தது. இருப்பினும், அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டதால், நேற்று, அனல் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
மொத்த உற்பத்தி திறனான, 2,970 மெகாவாட்டை காட்டிலும், கூடுதலாக, 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி, 10,094 மெகாவாட். இவற்றில், காற்றாலைகளில் இருந்து, 1,363 மெகாவாட் மின்சாரம் கிடைத்து உள்ளது.தொடர்ந்து, மின் உற்பத்தி அதிகரித்தும், சென்னை உட்பட மற்ற மாவட்டங்களில், நேற்றும் வழக்கம் போல் மின் தடை செய்யப்பட்டு உள்ளது.

தேதி அனல் மின் உற்பத்தி (மெகாவாட்)
18 2,595
19 3,185
20 3,055

No comments: