தமிழக மின் வாரியம், 2013-14ம் ஆண்டில், அனல் மற்றும் நீர் மின் திட்டங்கள் மூலம், 2,604 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய, மத்திய மின் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்தாண்டு, அனல்மின் உற்பத்திக்கு நிர்ணயித்த இலக்கை, தமிழக மின் வாரியம் எட்டிப்பிடித்து சாதனை படைத்து உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான, "டான்ஜெட்கோ'விற்கு, மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,514 மெகா வாட். இவற்றில், நீர் மின் திட்டங்கள் மூலம், 2,237 மெகா வாட்டும், அனல்மின் திட்டங்கள் மூலம், 2,970 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.
தமிழகத்தில் தற்போது, 4,000 முதல், 4,500 மெகா வாட் வரை, மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின் தடை, வெளி மாநிலங்களில் இருந்து, மின் கொள்முதல் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம், மின் பற்றாக்குறையை, "டான்ஜெட்கோ' ஈடு செய்கிறது.பொதுவாக, நீர் மின் திட்டங்களில் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, அதிக மின்சாரம் கிடைக்கும். ஆனால் அனல்மின் நிலையங்களில், எப்போதும், முழு அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
அடுத்தடுத்து, பருவ மழைகள் பொய்த்து போனதால், அணைகளின் நீர்மட்டம் குறைந்தது. போதிய நீர் இல்லாததால், நீர் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆண்டுதோறும், மாநில மின் வாரியங்களுக்கு, மின் உற்பத்தி இலக்கை, மத்திய மின் ஆணையம் நிர்ணயிக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்கு, நாட்டில் உள்ள அனைத்து மின் வாரியங்களும் கடும் சவால்களை எதிர் கொள்கின்றன.
இதே போல், 2013-14ம் ஆண்டுக்கான, மின் உற்பத்தி இலக்கை, மத்திய மின் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், தென் மண்டலத்தில் உள்ள மின் வாரியங்கள் (தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா), நீர் மின் உற்பத்தி திட்டங்கள் மூலம், 2,945.4 கோடி யூனிட்கள் மின்சாரம், உற்பத்தி செய்ய @வண்டும்.
இதில், தமிழக மின் வாரியம், நீர் மின் திட்டங்கள் மூலம், 2013 - 14ம் ஆண்டில், 465.6 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.நீர் மின் திட்டங்கள்தமிழகத்தில், 31 நீர் மின் திட்டங்கள் உள்ளன.இந்த திட்டங்கள் மூலம், ஒவ்வொரு மாதமும் உற்பத்தி செய்ய வேண்டிய, மின்சாரத்தின் அளவை, மத்திய மின் ஆணையம், தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.அனல்மின் உற்பத்திதமிழகத்தில், அனல் மின் உற்பத்தியில், எண்ணூர், வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல்மின் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புதிய மற்றும் கூட்டு முயற்சியில், கூடுதல் அனல்மின் நிலையங்கள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தென் மண்டலத்துக்கு உட்பட்ட மின் வாரியங்கள், அனல்மின் நிலையங்கள் மூலம், 7,632.7 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.இதில், தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில், 2,138.3 கோடி யூனிட்கள், மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். "டான்ஜெட்கோ' கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில், ஒவ்வொரு மாதமும் உற்பத்தி செய்ய வேண்டிய, மின் உற்பத்தியை, விரிவாக ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.
அனல்மின் உற்பத்தியில் சாதனை:இதுகுறித்து, தமிழக மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்தாண்டு, மத்திய மின் ஆணையம், அனல் மின் நிலையங்கள் மூலம், 2,018.5 கோடி யூனிட்கள் மின்சாரமும், நீர் மின் திட்டங்கள் மூலம், 560.1 கோடி யூனிட்கள் மின்சாரமும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது.
இவற்றில், தமிழக மின் வாரியம், அனல்மின் உற்பத்தி இலக்கான, 2,018.5 கோடி யூனிட்கள் மின்சாரத்தில், 2,027.7 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில், நீர் மின் உற்பத்தி இலக்கான, 560.1 கோடி யூனிட்டில், 290.6 கோடி யூனிட்கள் மின்சாரம் மட்டுமே, உற்பத்தி செய்தது.நீர் மின் உற்பத்தி, பருவ மழையை சார்ந்து உள்ளது. பருவ மழையின்மையால், நீர் மின் உற்பத்தி இலக்கை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.
பொதுவாக, நீர் மின் திட்டங்கள் துவங்கும் முன், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல கட்ட அனுமதிகள் பெற வேண்டும். அனுமதி கிடைப்பதில் ஏற்படும் இடையூறுகளால், திட்டமிட்டப்படி, நீர் மின் உற்பத்தி திட்டங்களை துவக்க முடியவில்லை.நடப்பு, 2013-14ம் ஆண்டிற்கான, அனல் மின் உற்பத்தி இலக்கை காட்டிலும், கூடுதல் மின்சாரத்தை, வாரியம் உற்பத்தி செய்யும். பருவ மழையை பொறுத்தே, நீர் மின் உற்பத்தி இலக்கை அடைய முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
1 comment:
அப்படியே இந்த ஆண்டு தனியாரிடம் மிசாரம் வாங்க எவ்வளவு கட்டிங் என்று முடிவு செய்து அறிவித்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் தனியாரிடம் மிசாரம் வாங்க பெரிய அளவில் லஞ்சம் கேட்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. அந்த லஞ்சபணம் வேண்டும் என்பதற்காகவே தனியார் மின் உரிப்பத்தி நிலையங்களை அரசு அதிகாரிகள் ஊக்குவிப்பதாகவும் பேசப்படுகின்றது சென்ற ஆண்டில் தனியாரிடம் 720 கோடி அளவுக்கு லஞ்சப்பணம் மின் துறை அலுவலர்களுக்கு கிடைத்ததாகவும் ஆணையத்தின் ஒரு உறுப்பினர் அந்தப் பணத்தில் வந்த பங்குத் தொகையை வாங்க மறுத்ததாகவும் பேசப்படுகின்றது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை செய்தால் நல்லது என்று மின்வாரிய ஊழியர்கள் காதோடு காதாக பேசிக்கொள்கின்றார்கள்
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
Post a Comment