மின் இழப்பை முறையாகக் கணக்கிடாமல் மின் வாரியம் விதிகளை மீறியுள்ளது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.( dinamani news )

மின் இழப்பை முறையாகக் கணக்கிடாமல் மின் வாரியம் விதிகளை மீறியுள்ளது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் கொண்டு வரும்போதும், நுகர்வோருக்கு விநியோகிக்கின்றபோதும் ஏற்படும் மின் இழப்பால் ஏற்படும் நஷ்டம் குறித்த விவகாரத்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்கள் கே. வேணுகோபால், எஸ். நாகல்சாமி ஆகியோர் தன்னிச்சை மனுவாக எடுத்து உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

மின் விநியோகத்தால் ஏற்படுகின்ற மின் இழப்பை துல்லியமாகக் கணக்கிடும் வகையில் மீட்டர் பொருத்தாமல் மின்சாரம் விநியோகிக்கப்படும் விவசாயம் மற்றும் குடிசைவாசிகளின் மின் நுகர்வு அளவை விஞ்ஞானரீதியில் கணக்கிடுமாறும், இந்த நுகர்வோருக்கும் மின் மீட்டர்களை பொருத்துமாறும் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.
மத்திய மின்சார தீர்ப்பாயமும் 28-8-2011 அன்று இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
மின் கட்டணத்தை மாற்றியமைப்பதில், இந்த மின் இழப்பால் ஏற்படுகின்ற நஷ்டம் தொடர்பான புள்ளி விவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், மின் வாரியம் இதுவரை மின் இழப்பு தொடர்பான முறையான கணக்கீட்டை நடத்தவில்லை. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இந்த மின் இழப்பு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருவதாக மின் வாரியம் தெரிவித்திருந்தபோதும், இதுவரை இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பான தகவல்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. இது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டம் 2005 பிரிவு 73(2) விதி மீறலாகும்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மின் வாரியம் சமர்ப்பித்த மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான பரிந்துரை மனுவில், 2012 நிதியாண்டுக்கான மின் இழப்பு 21.16 சதவீதம் எனவும், 2013-14 நிதியாண்டுக்கான மின் இழப்பு 21.60 சதவீதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவித முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் மின் வாரியம் சமர்ப்பித்துள்ள மின் இழப்பு அளவீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதற்கு மாற்றாக 2010-11 நிதியாண்டுக்கு 17.6 சதவீதம் எனவும், 2011-12 நிதியாண்டுக்கு 17.12 சதவீதம் எனவும், 2012-13 நிதியாண்டுக்கு 16.80 சதவீதம் எனவும் மின் இழப்பு அளவை ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், 2013-14 நிதியாண்டுக்கு மின் இழப்பு அளவை 16.40 சதவீதம் என்ற அளவில்தான் ஏற்றுக்கொள்ளும்.
இதுபோல் 2014-15 நிதியாண்டுக்கு 16 சதவீதம் எனவும், 2015-16 நிதியாண்டுக்கு 15.6 சதவீதம் என்ற அளவில் மட்டுமே மின் இழப்பு அளவை ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொள்ளும்.
மின் மீட்டர் இல்லாத மின் இணைப்புகளின் நுகர்வு மற்றும் மின் இழப்புகளை மூன்றாம் நபர் மூலம் விஞ்ஞான ரீதியிலான ஆய்வை மின் வாரியம் நடத்தி முறையான இழப்பு அளவீட்டை சமர்ப்பிக்கும் வரை இதுபோன்ற கணக்கீடு முறைதான் பின்பற்றப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...