மின்வாரியம் அறிவுரைமோசடி நபர்களிடம் உஷார்!


கோவை:"மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போல் நடித்து பணம், நகை திருட்டில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என, கோவை மின் பகிர்மான கழகம் அறிவுறுத்தியுள்ளது.கோவையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட காந்தி மாநகரிலும், சாயிபாபாகாலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியிலும், முன்னாள் "இஸ்ரோ' விஞ்ஞானி மற்றும் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீடுகளில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போல் நடித்து, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவங்களை தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்பார்வை இன்ஜி., குருராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

வீடுகளில் மீட்டர் கணக்கெடுக்க வந்தாலோ, மின் பணிக்காக வந்தாலோ, அவர்களின் அடையாள அட்டை கேட்டு வாங்கி உறுதி செய்து கொள்ள வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிகள் குறித்த தகவல்களை கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.1. ஒண்டிப்புதூர், சூலூர், சிங்காநல்லூர், இருகூர், கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகள்: 94458 51354.2. சங்கனூர், வேலாண்டிபாளையம், கணபதி, பீளமேடு, தண்ணீர்பந்தல், சாயிபாபாகாலனி, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், ஆவாரம்பாளையம் ஆகிய பகுதிகள்: 94458 51332. 3. டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன்பாளையம், புலியகுளம், பொன்னையராஜபுரம், செல்வபுரம், ஆர். எஸ்.புரம், ராமநாதபுரம் பகுதிகள்: 94458 51314.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடுகளில் மீட்டர் கணக்கெடுக்க வந்தாலோ, மின் பணிக்காக வந்தாலோ, அவர்களின் அடையாள அட்டை கேட்டு வாங்கி உறுதி செய்து கொள்ள வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிகள் குறித்த தகவல்களை கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

No comments: