பெரம்பலூர்: "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தொழில்நுட்பட உதவியாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட உள்ளனர்' என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (லிட்), தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்புகளின் அடிப்படையில்டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஸன் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.டிப்ளமோ இன் இன்ஸ்ட்ரூமென்டேசன் அன்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் இன்பர்மேஷன் டெக் ஆகிய பட்டயப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளன.இது தொடர்பான முன்னேற்பாடாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள மனுதாரர்களின் பதிவு ஆணங்களை சரிபார்த்து விடுபாடுகள் ஏதுமின்றி பட்டியல் அனுப்பும் வகையில் தயார் நிலையில் வைக்குமாறு சென்னை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இயக்குநர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன,
எனவே, பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள் யாவரும் தத்தம் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையின் பதிவெண் விவரத்தினை இணையதளத்தில் சரிபார்த்து இணையதள பிரதி ஒன்றினை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதும் விடுபாடுகளோ, குறைபாடுகளோ காணப்படும் நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு சரிபார்க்கலாம்
1 comment:
what about the Field Assistant/ ITI Holders. There is no field staff and also Board says there is no more contact labors, How the higher official TNEB/ can work. What will happen in future wait and see
Post a Comment