மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: தகுதியுடையோர் பதிவை சரிபார்த்துக் கொள்ள அழைப்பு

தமிழக மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்ய உள்ள நிலையில் இப்பணிக்கு தகுதியுடையோர் தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் வேலையளிப்போருக்கு இணையதளத்தின் வாயிலாக பதிவுத்தாரர்கள் பரிந்துரைக்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தலைமை பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவிலான பரிந்துரைப் பணியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் Diploma in Electrical Engineering Diploma in Electronics and Communication Engineering, Diploma in Mechanical Engineering, Diploma in Instrumentation and Control Engineering, Diploma Computer Science and Engineering Information Technology ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள இணையதள மையத்திலோ அல்லது தங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியினை பயன்படுத்தியோ தங்களது வேலைவாய்ப்பு அட்டையை பதிவிறக்கம் செய்து தங்களது முகவரி, ஜாதி, கல்வித்தகுதி மற்றும் பிறந்ததேதி ஆகியவற்றினை சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: