புதுடெல்லி: மின் தடைக்கு ( ரிலையன்ஸ் நிறுவனத்தின் ) டிஸ்காம்களின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளே முக்கிய காரணம் ( dinakaran news )


புதுடெல்லி: டெல்லியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்இஎஸ் மின் வினியோக நிறுவனங்களின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளே காரணம் என்று முதல்வர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார்.டெல்லியில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மின் தடையும் சேர்ந்து கொண்டு மக்களை வாட்டி எடுக்கிறது. தினமும் 3 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுவதாக பல பகுதிகளில் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோடை காலத்தில் தேவையான மின்சாரம் கையிருப்பு உள்ளது. அதனால், மின் வினியோக நிறுவனங்களின் (டிஸ்காம் கள்) இணைப்புகளில் ஏற்படும் கோளாறுகளால்தான் மின் தடை ஏற்படுகிறது என்று மாநில மின் துறை செயலாளர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.இந்த நிலையில், மின் தடை குறித்து முதல்வர் ஷீலா தீட்சித் கூறியதாவது:டெல்லியில் மின்சார பற்றாகுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான மின்சாரம் கையிருப்பு உள்ளது. தேவைக்கும் வினியோகத்துக்கும் இடைவெளியில்லை. ரிலையன்சின் பிஎஸ்இஎஸ் நிறுவனங்கள் மின் வினியோகம் செய்யும் இடங்களில் மட்டுமே மின் தடை ஏற்படுகிறது. இதற்கு அந்த நிறுவனங்களின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள்தான் காரணம்.


பிஎஸ்இஎஸ் ராஜதானி பவர் லிமிடெட், பிஎஸ்இஎஸ் யமுனா பவர் லிமிடெட் ஆகிய ரிலையன்சின் 2 மின் வினியோக நிறுவனங்களில் தலைமை நிர்வாகியை தலைமை செயலகத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரவழைத்து பேசினேன். கோடை காலத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் மின் தடை நீடித்துள்ளது என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று அப்போது அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் இப்போது, நடப்பது என்ன? இதை சிறிதும் பொறுத்து கொள்ள முடியாது.இந்த இரண்டு நிறுவனங்களும், டெல்லியில் 70 இடங்களில் மின் வினியோகம் செய்கின்றனர். டெல்லி அரசின் டிபிடிடிஎல் நிறுவனம் மின் வினியோகம் செய்யும் இடங்களில மின்தடை என்ற புகார் இதுவரை வரவில்லை.இது பற்றி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானிக்கு கடிதம் எழுதி, மின்தடை ஏற்படா மல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளேன். மேலும், மின்சாரம் வாங்கிய வகையில் 2 நிறுவனங்களம் டெல்லி அரசு நடத்தும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 3,337 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளதையும் உடன் செலுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளேன்.அந்த நிறுவனங்களில் நிதி நிலைமை பற்றி நான் கவலைப்பட முடியாது. தேவையான மின்சாரம் கையிருப்பு உள்ள நிலையில், நீண்ட நேர மின் தடையை சிறிதும் அனுமதிக்க முடியாது. மின் தடை தொடர்ந்தால், 2 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.இவ்வாறு முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=51619

No comments: