லோயர்கேம்பில் மின் உற்பத்தி தொடக்கம்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் ராட்சதக் குழாயில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு.
லோயர்கேம்ப் பெரியார் மின் உற்பத்தி நிலையத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை மின் உற்பத்தி துவங்கியது. அப்போது ராட்சதக் குழாயில் நீர்க் கசிவு ஏற்பட்டது.
ஆண்டுதோறும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்திற்கு ஜூன் 1-ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், ஜூன் 16 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால், குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டது.

பெரியார் நீர் மின் உற்பத்தி:
பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கேரள எல்லைப்பகுதியில் இருந்து, தமிழகத்திற்கு சுமார் 3 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையில் கொண்டு வரப்படுகிறது.
பின்னர், போர்-பை அணையில் இருந்து கொண்டு வரப்பட்டு, 3 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 4 ராட்சதக் குழாயின் மூலம், லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக பராமரிப்பு பணிகளுக்காக லோயர்கேம்ப் பெரியார் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல், ஒரு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், குமுளி மலைப்பாதை வழியாக வரும் 4 ராட்சதக் குழாய்களில் 3-ஆவது குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
உடனடியாக, மின்வாரிய ஊழியர்கள் கசிவு ஏற்பட்ட குழாயினை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். முடியாத நிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, 2-ஆவது குழாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு மீண்டும் மின்சார உற்பத்தி துவங்கியது. கசிவு ஏற்பட்ட குழாயைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன

No comments: