கூடுதல் டெபாசிட்தினமலர் செய்தி


இந்த செய்தி தகவலுக்காக பகிரப்படுகிறது

             தமிழகத்தில் புதிதாக மின் இணைப்புப் பெறுவோரிடம், அவர்கள் கேட்கும் இணைப்பு முறைக்கேற்ப, மின் பகிர்மானக்கழகத்தால் டெபாஸிட் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 3 பேஸ் இணைப்புப் பெறுவோர்க்கு, ஒரு கிலோ வாட் மின்சாரத்துக்கு 600 ரூபாய் வீதமாக, அதிகபட்சமாக 5 கிலோ வாட் கணக்கிட்டு, 3,000 ரூபாய் டெபாசிட் பெறப்படுகிறது. சமீபமாக, தமிழகம் முழுவதும் மின் நுகர்வோரிடம், மின் பயன்பாட்டைப் பொறுத்து, கூடுதல் டெபாசிட் செலுத்துமாறும், செலுத்தத்தவறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்படுமென்றும் அறிவித்துள்ளது.இதன்படி, தமிழகம் முழுவதும் கூடுதல் டெபாசிட் தொகையை மின் நுகர்வோர் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தாதவர்கள் மீது அபராதம் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. 

வீடுகள் மற்றும் வணிக ரீதியான இணைப்பு அனைத்துக்கும், பொதுவான முறையில்தான் மின் பயன் பாட்டை மின் பகிர்மானக்கழகம் கணக்கிடுகிறது. அதாவது, ஆண்டுக்கு ஆறு முறை செலுத்தும் கட்டணத்தின் அடிப்படையில், மூன்று மாத சராசரித் தொகை அல்லது ஒன்றரை மாத மின் கட்டணத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப கூடுதல் டெபாஸிட் பெறப்படுகிறது.உதாரணமாக, மூன்று பேஸ் இணைப்புக்காக 3,000 ரூபாய் டெபாஸிட் செலுத்தியிருக்கும் ஒருவருக்கு, மின் கட்டணம் 500 ரூபாய் மட்டுமே வரும்பட்சத்தில், அவருக்கான 
டெபாஸிட் தொகை, 750 ரூபாய் போதுமானதாகும்; மீதமுள்ள தொகை, கூடுதல் டெபாசிட் ஆகக் கருதப்படும். 
இந்த தொகையை, அடுத்தடுத்து செலுத்தும் இரு மின் கட்டண "பில்'களில் கழித்துக்கொள்ள வேண்டும்; அதற்குப் பின்பும், மீதித்தொகை இருந்தால், சம்மந்தப்பட்ட மின் நுகர்வோர் பெயரில் காசோலையாக வழங்க வேண்டுமென்கிறது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் விநியோக விதி. 
ஒரு வேளை, இதைத் திரும்பப் பெறுவதற்கு மின் நுகர்வோர் விண்ணப்பிக்காதபட்சத்தில், கூடுதலாகவுள்ள டெபாசிட் தொகைக்குரிய வட்டியை (இன்றைய நிலையில்9 சதவீதம்) மின் நுகர்வோருக்கு மின் பகிர்மானக்கழகம் வழங்கவேண்டும். ஆனால், கூடுதல் டெபாசிட் செலுத்துவது தொடர்பாக, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, மின் நுகர்வோரை மிரட்டி வரும் மின் பகிர்மானக்கழகம், இதுதொடர்பாக எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடுவதில்லை.ஏற்கனவே, 55 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் இருக்கும் மின் வாரியம், மக்களுக்கு தேவையின்றி வட்டி கொடுப்பதை விட, கூடுதல் டெபாசிட் தொகையைத் திருப்பிக் கொடுத்து விடுவதே இரு தரப்புக்கும் நல்லது. "விழிப்புணர்வு இல்லை'கோவை மண்டலத்தில், மின் நுகர்வோருக்கு மின் பகிர்மானக்கழகத்தால் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை குறித்து, பல்வேறு தகவல்களையும் தகவல் உரிமைச் சட்டத்தில் வாங்கியுள்ளது, "கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு. இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன் கூறுகையில், ""சில பகுதிகளில் உள்ள மின் பகிர்மானக்கழக அதிகாரிகள் மட்டும், தங்களுக்குரிய பகுதி அலுவலகங்களில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு, கூடுதல் டெபாசிட்டை மின் நுகர்வோருக்கு திருப்பிக்கொடுத்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில், அதிகாரிகளும் எதுவும் சொல்வதில்லை; மக்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை,'' என்றார்.

No comments: