ஏழைகளுக்கு இலவச மின்சாரம்: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம், ஜூன். 6- 

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. நேற்று உம்மன் சாண்டி தலைமையில் கேரள மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி மந்திரிகளுடன் உம்மன் சாண்டி ஆலோசனை நடத்தினார். அப்போது ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி மாதம் 20 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் ஏழை குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மாதம் 20 யூனிட்டுக்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் ஏழைகளின் மின் கட்டணத்தை கேரள அரசே ஏற்றுக் கொள்ளும். 

இந்த இலவச மின்சார திட்டத்தின் மூலம் கேரளாவில் மாதம் தோறும் 25 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்று அரசு அறிவித்து உள்ளது.

No comments: