மின்வாரியத்தில் 951 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு ( தினமலர் )

திருநெல்வேலி : மின் வாரியத்தில் 951 பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக தலைமை இன்ஜினியரால் தொழில் நுட்ப உதவியாளர் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் உட்ப பணிக் காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவுதாரர்களின் பட்டியல் கோரப்படுகிறது.
தொழில் நுட்ப உதவியாளர் (எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்) 822 பணியிடங்கள், தொழில் நுட்ப உதவியாளர் (எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) 45 பணியிடங்கள், தொழில் நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) 48 பணியிடங்கள், தொழில் உட்ப உதவியாளர் (இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங்) 18 பணியிடங்கள், தொழில் நுட்ப உதவியாளர் (கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் இன்பர்மேஷன் டெக்னாலஜி) 18 பணியிடங்கள் நிரப்பபடுகிறது. தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றுகள், சாதி சான்று, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் 21ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுக வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=738523


பதிவை சரி பார்த்து கொள்ள வேலை வாய்ப்பகம் அழைப்பு


ஈரோடு: தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ள தொழில் நுட்ப உதவியாளர் (டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேசன், இன்ஸ்ட்ரூமென்ட் அன்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்டு இன்ஜினியரிங் மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி) பணி காலியிடங்களுக்கு பரிந்துரை செய்யும் பொருட்டு உயிர் பதிவேட்டில் உள்ள அனைத்து தொழில் நுட்ப உதவியாளர் பதிவு விபரங்கள், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள், தங்களது பதிவை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட பதிவுதாரர்கள் ஜூன், 19 மற்றும், 20ல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று, ஆகியவற்றுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், அவரவர் பெயரை சரிபார்த்து கொள்ள வேண்டும், என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா கேட்டுக்கொண்டார்.
பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், இணையதளம் வழியாக எடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3 comments:

கலையமுதன் said...

இந்த அறிவிப்பு மிகுந்த குழப்பமாக இருக்கிறது . அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு மட்டுமா அல்லது அனைவருக்குமா ? தெரிந்தவர்கள் சொல்லவும் .
அண்ணாதுரை சேலம்

மின்துறை செய்திகள் said...

அப்ரண்டீஸ்முடித்தவர்களுக்கு மட்டும்

Unknown said...

Ganesh Moorthi Sir,

When Madurai E.B Call For This Post(Technical Assistant) and must complete apprentice in t.n.e.b .
Because i registered in madurai employment office. I did not complete apperentice job in t.n.e.b