பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் வசதி: தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகம்

செல்போன் வாடிக்கையாளர்கள் பிரீபெய்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் தேவைக்கு ஏற்றவாறு ரீசார்ஜ் செய்து பேசி வருகிறார்கள்.

மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இனி பிரீபெய்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மராட்டியம், டெல்லியில் பிரீபெய்டு மீட்டர் திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் விரைவில் பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் வசதி முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் என்.ஜி.ஒ. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. நுகர்வோர் கட்டணம் செலுத்தி பிரீபெய்டு இணைப்பை பெறலாம். இதற்கான மீட்டரை மின்சார வாரியம் பொருத்தும். அதோடு அதற்கான கார்டும் வழங்கப்படும். 

மின்சாரத்தை பயன்படுத்தும்போது நாம் செலுத்திய பணம் குறைந்து வரும். பிரீபெய்டு மீட்டரில் 10 சதவீதம், பேலன்ஸ் இருக்கும் போது உஷார் ஒலி சத்தம் கேட்கும். உடனே நுகர்வோர் அந்த கார்டு மூலம் ஆன்லைனிலோ அல்லது கவுண்டர் மூலமோ ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.

இதன்மூலம் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின் அளவுக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பதை அறிய முடியும். அதற்கு ஏற்றவாறு மின்சாரத்தை பயன்படுத்தி சிக்கனப்படுத்திக் கொள்ளலாம். 

பிரீப்பெய்டு மீட்டர் மூலம் மின் திருட்டையும் தடுக்க முடியும் என்று அந்த அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். மேலும் அந்த அதிகாரி கூறும்போது பிரீபெய்டு மீட்டரின் விலை ரூ.2,500 ஆகும். இதை இலவசமாக பொருத்துவோம். நுகர்வோர் ரூ. 500 செலுத்தி பிரீபெய்டு கார்டை பெறலாம். ஆன் லைன் மூலமோ அல்லது அருகே உள்ள மின் அலுவலகத்தின் மூலமோ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றார். 

உயர் அழுத்த மின் இணைப்பு வைத்து தானியங்கி மீட்டர் ரீடிங்கை பெற்றவர்களுக்கு முதல் கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click