சக்தி சேமிப்பு - ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்

ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்' என்பது ஒரு வாகனத்தில் ப்ரேக் உபயோகிக்கும் போது வீணாகும் இயங்காற்றலை (கைனடிக் எனர்ஜி) பிடித்து அதை சேமித்து வைக்கும் தொழில்நுட்பமாகும். இந்த முறை தொழில்நுட்பத்தை எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களில் காண முடியும். பொதுவான ப்ரேக்கிங் முறையில் ப்ரேக் ரோட்டர் மூலம் ப்ரேக் பேட்கள் உராய்வை வீல்களில் ஏற்படுத்தி வண்டியின் வேகத்தை குறைப்பதோ அல்லது நிறுத்துவதோ செய்யும். கூடுதல் உராய்வு சாலைக்கும் டயருக்கும் இடையே ஏற்பட்டு அதுவும் வண்டியை நிறுத்தும். இந்த உராய்வுதான் இயங்காற்றலையை வெப்ப ஆற்றலாக மாற்றக்கூடியது. இதுவே ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்கில் ஓட்டுனர் ப்ரேக் பெடலில் கால் வைத்தவுடன் வண்டியின் எலக்ட்ரிக் மோட்டார் "ரிவர்ஸ் மோட்டிற்கு' போய் பின்புறமாக ஓடத் துவங்கும்.
இதனால் காரின் வீல்களில் வேகம் குறைந்து விடும். மோட்டார் பின்புறமாக ஓடும் நேரத்தில் அது எலக்ட்ரிக் ஜெனரேட்டராக இயங்கி மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை வண்டியின் பாட்டரிகளில் சேமித்து வைத்துவிடும். இந்த வகை ப்ரேக்கிங் முறை குறிப்பிட்ட வேகத்திற்கு மட்டுமே பொருந்தும் பொதுவாக அடிக்கடி நிறுத்தி நிறுத்தி போகக்கூடிய நகர போக்குவரத்துகள் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த ப்ரேக்கிங் முறை உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் அதிகப்படியான ப்ரேக்கிங் தேவைப்படும் பட்சத்தில் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களில் ஃப்ரிக்ஷன் ப்ரேக்குகளும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சக்தி சேமிப்பு என்பது ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்கில் சிறப்பாக நடக்கிறது. பொதுவான ப்ரேக்கிங் முறையில் 80 சதவிகித சக்தி உராய்வினால் வெப்பமாக மாற்றப்பட்டு வீணாகிறது. ஆனால் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்கில் இதில் பாதி சக்தி சேமிக்கப்பட்டு மீண்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் எரிபொருள் சிக்கனம் 10 முதல் 25 சதவிகிதம் வரை கிடைக்கிறதென்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவே ஹைட்ராலிக் ரீனெஜரேட்டிவ் ப்ரேக்கிங்கில் 25 முதல் 45 சதவிகித எரிபொருள் சிக்கனம் கிடைக்கிறது.


21ம் நூற்றாண்டின் ஆரம்பமே இன்டர்னல் கம்பஷன் என்ஜின்களுக்கு முடிவு கூறும் காலமாக இருக்கும். பல வாகன உற்பத்தியாளர்கள் மாற்று எரிசக்திகளை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டனர். எலக்ட்ரிக் பாட்டரிகள், ஹைட்ரஜென், அழுத்தப்பட்ட காற்று என்று இந்நிலையில் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் என்பது சிறியதானாலும் மிகவும் சிறப்பான தொழில்நுட்ப அம்சமாகும்.இந்த ப்ரேக்குகளினால் பாட்டரிகளின் ஆயுள் கூடுகிறது என்பதும் மற்றொரு சிறப்பம்சம். இன்றைய கார்களில் டொயோட்டா ப்ரையஸ், டெஸ்லா ரோட்ஸ்டர் போன்றவை ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: