நடப்பு 2013-14ம் நிதியாண்டில்,மொத்த மின் பற்றாக்குறை 6.7 சதவீதமாக அதிகரிக்கும்-

நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த மின் பற்றாக்குறை. 6.7 சதவீதமாக உயரும். உச்ச பட்ச நேரத்தில், மின் பற்றாக்குறை, 2.3 சதவீதமாக இருக்கும் என, மத்திய மின் ஆணையம் (சி.இ.ஏ) தெரிவித்துள்ளது.இது குறித்து, ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்-நாட்டில் போதிய அளவிற்கு மின் பகிர்மான வசதிகள் இல்லாததால், மாநிலங்களின் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.குறிப்பாக, வடக்கு, வட கிழக்கு, மேற்கு (என்.இ.டபிள்யூ) மின் தொகுப்புகள் மற்றும் தென் பிராந்திய மின் தொகுப்பில், மின் வினி@யாகத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
இதன் காரணமாக, மின் தட்டுப்பாடு அதிகம் உள்ள தென் மாநிலங்களுக்கு, அதிக அளவில் மின் வினி@யாகம் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.நடப்பு நிதியாண்டில், தற்‌போதுள்ள மின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு வர உள்ள மின் திட்டங்கள் மூலம், நாட்டின் மொத்த மின் உற்பத்தி, 97,500 கோடி யூனிட்டுகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது சென்ற 2012-13ம் நிதியாண்டில், முந்தைய நிதியாண்டை விட, 6.2 சதவீதம் கூடுதல் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.மின்சாரத்திற்கானதேவை, மதிப்பீட்டை விட, 1.04 சதவீதம் உயர்ந்து, 5.1லிருந்து, 6.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது.கிழக்கு பிராந்தியம் தவிர, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மின் பற்றாக்குறை உள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மின் உற்பத்தி திறனில், 35,670 மெகா வாட் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அனல் மின்சாரத்தின் பங்களிப்பு, 15,234 மெகா வாட்டாக இருக்கும். நீர் மற்றும் அணு மின் உற்பத்தி, முறையே 1,198 மெகா வாட் மற்றும் 2,000 மெகா வாட்டாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to 


No comments: