பருவ நிலை மாற்றத்தால் குறைந்தது மின் நுகர்வு: மின் தடை நேரம் குறைப்பு


பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், தினசரி மின் நுகர்வின் அளவு குறைந்துள்ளது. மின் பயன்பாடு குறைவால், சென்னை உட்பட, மாநிலம் முழுவதும், குறைந்தளவு நேரமே மின் தடை செய்யப்படுகிறது.

பன்மடங்கு:@@தமிழகத்தில், கோடை காலம் துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. கத்திரி வெயில் காலம், மே, 4 முதல், 28ம் தேதி வரை நீடித்தது. இந்த நாட்களில், 111 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியது. வெப்ப நிலை உயர்வால், தினசரி மின் நுகர்வின் அளவு, பன்மடங்கு உயர்ந்தது.இந்தாண்டு, ஜனவரியில், தினசரி மின் நுகர்வின் அளவு, 21 கோடி யூனிட்கள்.கோடையில், தொடர்ந்து அதிகரித்த வெப்பத்தால், தினசரி மின் நுகர்வு, 28 கோடி யூனிட்கள் அளவிற்கு உயர்ந்தது. மே, 28ம் தேதியுடன், கத்திரி வெயில் முடிந்ததால், வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

காற்றாலைகள்:@@தற்போது, தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், மின் பயன்பாடு குறைந்து உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின்நுகர்வு, 22 கோடி யூனிட்கள் அளவிற்கு குறைந்தது. மின் பயன்பாடு குறைந்ததால், காற்றாலைகள் அமைந்துள்ள மாவட்ட பகுதிகளிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மின் தடை நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.சுழற்சி முறையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு மணி நேரம் செய்யப்படும், மின் தடையின் நேரமும் குறைந்து உள்ளது. பெரும்பாலான இடங்களில், பகலில் மின் தடை ஏற்படுவதில்லை.

மின் உற்பத்தி குறைவு ஏன்?@@இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த சில வாரங்களாக, காற்றாலைகளில் இருந்து, சராசரியாக, 2,000 முதல் 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, மின்சாரம் கொள்முதல் செய்வதை, மின் வாரியம் முற்றிலும் நிறுத்தி உள்ளது. பருவ நிலை மாற்றத்தால், தற்போது, மின் பயன்பாட்டு அளவு குறைந்து உள்ளது. இதன் காரணமாகவே, மின் கொள்முதல் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நேரங்களில், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி, பராமரிப்பு பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments: