வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி?

எந்த ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 1,2012 முதல் 31 மார்ச் 2013 வரையிலான அனைத்து வருமானங்களுக்கும், வருமான வரி தாக்கல் செய்ய கடைசி
நாள் ஜூலை 31, 2013 ஆகும்.
சில நேரங்களில் வருமான வரித்துறை தேதியை நீட்டிக்கும். அவ்வாறு நீட்டிக்கப்பட்டால் அதை வரித் துறை கண்டிப்பாக தெரிவிக்கும். உதாரணமாக, கடந்த ஆண்டு கடைசித் தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. கடைசி தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் கிடையாது.
ஆண்டு வருமானம், வருமான வரி வரம்பை தாண்டிவிட்டால் நீங்கள் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்யவேண்டும். மேலும் ஆண்டிற்கு ரூ 10 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உள்ளவர்கள், அதை மின்னணு வடிவத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.
"மின் தாக்கல்(E-filing), ஒரு தனிநபர் அல்லது இந்து மத பிரிக்கப்படாத குடும்பத்திற்கு, அவரது அல்லது குடும்பத்தின் மொத்த வருமானம், அல்லது முந்தைய ஆண்டிற்கான சட்டத்தின் கீழ் வரிவிதிப்புக்குரிய மொத்த வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் மதிப்பீட்டு ஆண்டு 2012-13 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என வருமான வரி துறை கடந்த ஆண்டு தெரிவித்துள்ளது.
எனவே வருமான வரி தொடர்பான ஆவணங்களை தயாராக வைத்திருங்கள். ஏனெனில் கடைசி நாளுக்கு ஒரு சில நாட்களே உள்ளன.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click