ஓசூர்: விவசாய மின் இணைப்புசெயற்பொறியாளர் தகவல்

"ஓசூர் மின் கோட்டத்தில், விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது, ' என ஓசூர் தமிழ்நாடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த விவசாய மின் இணைப்பிற்காக பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள விவசாய மின் இணைப்பு விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.இதற்காக நடப்பாண்டில், மின் இணைப்பு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண வரிசை திட்டத்தில், 2011ம் ஆண்டு ஃபிப்ரவரி 28ம் தேதி வரை பதிவு செய்த காத்திருப்போருக்கும், 25 ஆயிரம் சுயநிதி திட்டத்தில், 2008ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை 500 ரூபாய் செலுத்தியவர்களுக்கும், 50 ஆயிரம் ரூபாய் சுயநிதி திட்டத்தில் 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 500 ரூபாய் செலுத்தியவர்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.இந்த கால இலக்கிற்குள் வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது நிலத்திற்குண்டான உரிமை சான்றிதழுடன் உரிய பிரிவு அலுவலரை அணுகி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: