கரூர்: மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

கரூர்: "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (லிட்) நிர்வாக கிளை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது' என, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் துரைராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:டிப்ளோமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், கன்ட்ரோல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் இன்ஜினியரிங் படி த்து, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களது, அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிசான்று, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன், வரும் 19 ம் தேதி காலை 11 மணிக்கு, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து, பதிவுகளை சரிபார்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: