சிவகங்கை: மின் கட்டணம் செலுத்துவதில் பயனீட்டாளர்கள் வாரிய குளறுபடியால் பொது மக்கள் தவிப்பு (தினமலர் செய்தி

சிவகங்கையில், வீடுகள், வர்த்தகம், தொழிற்சாலைகளில் மின்கணக்கீடு பணிகள் மேற்கொள்ளும் தற்காலிக ஊழியர்களின், குளறுபடியால் மின்கட்டணம் செலுத்த முடியாமல், நுகர்வோர்கள் தவிக்கின்றனர். மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில், வீடு, வர்த்தக நிறுவனம், தொழிற்சாலைகள் என, 3.30 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களே, நேரடியாக 2 மாதங்களுக்கு ஒரு முறை, வீடு, வர்த்தக நிறுவனம், தொழிற்சாலைகளில், பயன்படுத்தப் பட்ட மின்சார அளவுகளை கணக்கிட்டு, அதற்கான கட்டணத்தையும், மின் கணக்கீடு அட்டையில் குறித்து வைப்பர். இந்த அட்டையில் உள்ள தொகையை, மின் பயனீட்டாளர்கள், மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தினர். சில மாதங்களாக, மின் கணக்கீடு பணிக்கான ஊழியர்கள் பற்றாக்குறையால், தற்காலிக அடிப்படையில் (அவுட் சோர்சிங்) ஊழியர்களை நியமித்து, மின்கணக்கீடு அளவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் ஈடுபடும், தற்காலிக ஊழியர்களுக்கு தலா ஒரு மின் இணைப்பிற்கு, ரூ.3 சம்பளம் தரப்படுகிறது.இவர்களில் சிலருக்கு ஒரு சில மாதம் சம்பள பாக்கி இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.குழப்பம்: தற்காலிக ஊழியர்கள் வீடுகளில் பயன்படுத்திய மின்சாரத்தை கணக்கிட்டு, அதற்கான அட்டையில் தொகையை குறிப்பிடாமல், வந்து விடுகின்றனர். மின் பயனீட்டாளர்கள் கேட்டால், பணம் கட்ட வரும்போது, அலுவலகத்தில் கேட்ட பின், தொகையை கட்டுமாறு கூறிச் செல்கின்றனர். மின்வாரிய அலுவலகத்திற்கு, குறைந்த தொகையுடன் செல்லும் பயனீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இது போன்ற குழப்பத்தால் மின் பயனீட்டாளர்கள் பாதிக்கின்றனர்.சிவகங்கை, மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரா கூறுகையில்,"" மின்கணக்கீடு பணி மேற்கொள்வதில், ஊழியர்கள் பற்றாக்குறையால் வெளி ஆட்களை வைத்து எடுக்கிறோம். வீடுகளில் மின் யூனிட்டை குறித்துவிட்டு, அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் யூனிட்டை குறிப்பிட்டு பார்த்த பின் தான், மின்கட்டண தொகை தெரியும். இதற்காக, அப்படி செய்கின்றனர்.மேலும், டெபாசிட் தொகை பெறும் நோக்கில், நுகர்வோரை நேரில் அழைத்து விவரம் அளிக்கவும், கட்டண விவரம் குறிப்பிடாமல் இருக்கலாம். தற்காலிக ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருந்தால்,உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click