சூரிய மின் சக்தி துறை பயிற்சி: அரசு ஏற்பாடு

சூரிய மின் சக்தி தொழில்நுட்பப் பயிற்சியை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம் நடத்துகிறது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தியில், சூரிய மின் சக்தி துறையில் தொழில்நுட்பப் பயிற்சி ஜூலை 10-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் சூரிய மின் சக்தி உற்பத்தி மற்றும் சூரிய மின் சக்தி உபகரணங்கள் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிகள் தமிழ்நாடு இண்டஸ்டிரியல் டிரெயினிங் சென்ட்டரில் நடக்கும்.
மாணவர் சேர்க்கை, பயிற்சிக் கட்டணம், பயிற்சி நேரம் போன்ற தகவல்களுக்கு 99411 31357, 89397 37387 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: