பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார் அகர்வால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...