அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 237 நாள்.22.07.2013ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது(அதாவது 3% + 3%). பணப்பலன்   01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது (Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013).

             01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் நடைமுறைப்படுத்தி இந்த ஆணை அமுலுக்கு வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெறுவர்.

No comments: